Saturday, September 10, 2011

அமெரிக்காவும் இஸ்லாமோபோபியா வலையமைப்பும்.


        இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பயம்,வெறுப்பு,வெறி மற்றும் அறியாமைத் தகவல்கள் பரப்புவது அமெரிக்காவில் இஸ்லாமொபியா நெட்வேர்க்கு ஒரு பெரும் லாபமான செயற்பாடாக உள்ளது.

Center for American Progress Action Fund தனது ஆறு மாத கால,138 பக்க "Fear Inc - Exposing the Islamophobia Network in America",என்ற ஆராய்ச்சியை சமிபத்தில் வெளியிட்டது,இந்த அறிக்கை முதன் முதலாக பல விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.கடந்த ஒரு தசாப்த(2001-2009) காலமாக அமெரிக்காவின் ஏழு அறக்கட்டளைகள் மூலம் 42 மில்லியன் ரூபாக்கள் இஸ்லாமிய எதிர்ப்பை உருவாக்க மற்றும் பரப்ப  பயன்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது, இந்த செயற்பாடு சிறிய அளவில் இடம்பெற்றாலும் இந்த நிதியுதவியப் பெரும் தனிநபர்கள் மற்றும் குழுக்கள் இடையே ஒரு உறுதியான இணைப்பு அல்லது தொடர்பு இருந்து வருவதாகவும் மேலும் அந்த அறிக்கை கூறுகிறது.


இந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் இந்த வலையமைப்பின் செயற்பாடுகளை மிகவும் ஆழமாக ஆய்வு செய்து,அவற்றை தெளிவாக வகைப்படுத்தி,இந்த நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்குபவர்களை கண்காணித்து,இந்த வலையமைப்பில் இயங்குபவர்கள் யார் அவர்களுக்கிடையிலான தொடர்பை கண்டுபிடித்து,கற்பனையான அச்சுரத்தல்களை வெளிக்கொண்டுவந்து(Anti Shariya),தீவிரப்போக்கை யார் துவங்குகிறார்கள் என்று கண்டுபிடித்து ஒரு பாரிய முயட்ச்சிக்குப் பின் அதை தற்போது வெளியிட்டுள்ளனர்.



            இந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் இஸ்லாமொபோபியாவை பின்வருமாறு வரையருக்குகிறார்கள் : இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பயம்,வெறுப்பு மற்றும் விரோதப்போக்கை தொடர்ச்சியாக இடம்பெறச்செய்தல்.இதன் விளைவாக முஸ்லிம்கள் மீது அமெரிக்க சமூகத்தில் பாரபட்சம்,பாகுபாடு மற்றும் பிரச்சினை என்பவற்றை உருவாக்கி முஸ்லிம்களை அமெரிக்க சமூக,அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைத்தல்.


  ஆரோக்கியமான விவாதம்,முரண்பாடுகள் மற்றும் கருத்துவேறுபாடுகள் என்பன ஒரு சிவில் சமூகத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது,ஒரு மதம்,இனம் அல்லது அரசியல் என்பனவற்றை விவரிக்க முற்படும்போது இவை உண்மையில் அத்தியாவசியமாக மாறுகிறது.

எனினும் இந்த அறிக்கை தெளிவாக விஷமக் கருத்துக்களைப் பரப்பி தீவிரப்போக்கை உண்டாக்குபவர்களைப் பற்றி பேசிகிறது,இந்த தீவிரப்போக்கை அவர்கள் பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்றவற்றை மக்களிடம் கூறி இந்த போக்கை அமெரிக்காவில் உருவாக்குகின்றனர்.இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பாக உள்ளவர்களின் வெறுப்புமிக்க இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்கு மேலுள்ள சொல்லாடல்கள் நல்ல இலாபத்தை தேடித்தருகின்றது.


அமெரிக்காவில் Islamophobia வலையமைப்பு ஐந்து பிரிவுகள் கொண்டது
  1. நிதி மூலம்  ஏழு பெரும் நிதிக்  கொடையாளிகள்  42 மில்லியன் டொலர்களை  இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் தனி நபர்கள் மீது செலவு செய்துள்ளனர்.
  2. Islamophobia அறிஞர்கள் மற்றும் கொள்கை நிபுணர்கள் - இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வீணான கற்பனையான பொய்த் தகவல்களை உருவாக்கும் கேடுகெட்ட பொறுப்பு ஐந்து தனிநபர்கள் மற்றும் அவர்களின் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இவர்களே அமெரிக்க இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரரத்தின் மைய நரம்புப்பகுதியாகும்.உதாரணத்துக்கு பிரான்க் க்ரப்னி (Frank Grafny) என்ற பழைமைவாத சிந்தனையாளரின் Center For Security Policy என்ற நிறுவனம் இஸ்லாமிய ஷரியத்தையும் இஸ்லாமிய சட்டங்களையும் பொய்யாக்க பல மில்லியன்களை செலவுசெய்கிறது.தீவிர முஸ்லிம்கள் அமெரிக்க அரசியல் அமைப்புக்கு மாற்றீடாக இஸ்லாமிய ஷரியாவை நடைமுறைப்படுத்தக் கேட்பதாகவும் அது அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் தனித்தன்மைக்கும் ஒரு பெரும் சர்வாதிகாரத்தனமான அச்சறுத்தல் எனவும் இந்தக் கூட்டத்தினர் வீண் கோசம் எழுப்பித்திரிகின்றனர்.அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் தலைவர்கள்,சரியா பற்றிய இவர்களின் கொள்கைக்கு அறியாமையே காரணம் என்கின்றனர்.
  3. அடிப்படை அமைப்புக்கள் மற்றும் மத உரிமை.- புதிய மற்றும் தற்போதுள்ள வலையமைப்புக்கள்  மற்றும் பிரபலமான சமய போதகர்கள்,அவர்களின் கருத்துக்களை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் செயட்குளுவினருக்கு தெரியப்படுத்துகின்றனர்.பிராங்க் க்ராப்னியை ( Frank Grafny ) சார்ந்துள்ள Act For America என்ற அமைப்பு பிரான்க் க்ராப்னியின் இஸ்லாமிய ஷரியாவுக்கு எதிரான கொள்கையையும்  மற்றும் அந்த அமைப்பினரால் கற்பனையாக உருவாக்கிக் கொல்லப்பட்ட கொள்கையையும் உலகம் பூராகவும் உள்ள அவர்களின் 170000 அங்கத்தவர்கள் மூலம் பரப்பிவருகின்றனர்.தற்போது அமெரிக்காவில் 23 மாநிலங்களில் ஷரியாவுக்கு எதிரான மசோதாக்கள் பரீசீலனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  4. ஊடகம் - இந்த வலையமைப்புக்கு மிக முக்கியமான துணை ஊடகம் ஆகும்.தீவிர இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரகர்களால் ஊடகங்களின் கூட்டணிக்கு பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.தொலைகாட்சி(Fox),வானொலி(Rush Limbaugh, Sean Hannity, Glenn Beck),இணைய இதழ்கள்(World Net Daily, Front Page Magazine) மற்றும் வலைப்பூக்கள்(Jihad Watch) மூலம் இவர்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிகள் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
  5. அரசியல்வாதிகள் - கடைசியாக அரசியல்வாதிகள் மிக முக்கியமாக 2012 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இஸ்லாம் மற்றும் ஷரியாவையே கையில் எடுத்துள்ளனர்.இதில் Michele Bachmann, Herman Cain and Newt Gingrich போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

    உலகம் பூராகவும் பல முஸ்லிம் நாடுகளுடன் நெருங்கிய உறவு பேணும் ( For Oil ) அமெரிக்க தனது நாட்டில் உள்ள முஸ்லிம்களை சந்தேக நபர்களாகவும் நிரந்தர விரோதிகளாகவே பார்க்கின்றனர்.

    அமெரிக்காவில் Tennessee, California மற்றும்  Brooklyn போன்ற இடங்களில் பள்ளிவாசல்கள் கட்ட தொடர்ந்தும் எதிர்ப்பு  போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன.கடந்த பெப்ரவேரி மாதம் Yorba  Linda நகரில் நடந்த முஸ்லிம்களின் நிதி திரட்டும் ஊர்வலத்துக்கு தாக்கதல் நடத்தப்பட்டது,அப்போது தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிகளை தீவிரவாதிகள் என்று திட்டியதுமல்லாமல் "Take your sharia and go home, you terrorist lovers."   என்றும் கூறியுள்ளனர்.இது பொது மக்களால் மேட்கோள்ளப்பட்ட ஒரு தாக்குதலாக என்ன முடியாது ஆனால் இவை   Act! For America, Stop Islamisation of America மற்றும் state Tea Party groups போன்ற தீவிர இஸ்லாமிய  எதிர்ப்பு குழுக்களால் நன்கு திட்டமிடப்பட்டு மேட்கோள்ளப்பட்ட தாக்குதலாக பார்க்கப்பட்டது.
     
      வலைப்பதிவாளர் Pamela Geller இவர் Stop Islamisation of America இணை   நிறுவனர் மற்றும்  Ground Zero பள்ளிவாசல் கட்டாமல் இருக்க முன்னின்று உழைப்பவர்.இவர் முஸ்லிம்களும் நாஜிகளும் ஒரே கொள்கையுடையவர்கள் என்ற கருத்தை பல இடங்களில் அவதூறாக பரப்பி வருகிறார்.மேலும் நல்ல மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களை அமெரிக்க இராணுவத்தில் சேர்க்கக் கூடாது எனவும் கூறிவருகிறார். 


     அடுத்து Act! For அமெரிக்க நிருவனத்தின் நிறுவனர் Brigitte Gabriel  இவர் ஒரு தீவிர இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரகர் ஆவார்.இஸ்லாத்தையும் அதன் கடமைகளையும் நேசிக்கும் ஒருவன் சிறந்த அமெரிக்கனாக முடியாது என ஒரு வீணான தர்க்கத்தை அமெரிக்காவில் பரப்பி வருகிறார்.இவரின் புதிய நூலின் பெயர் “They Must Be Stopped,” என்ற இஸ்லாமிய எதிர்ப்பு நூலாகும்.இவர் ஒரு லெபனானிய கிறிஸ்தவர் ஆவார்.

      Anti Defamation League என்ற அமைப்பு மேற்கூறப்பட்ட இரு அமைப்புக்களையும் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்கலாகவே பார்க்கின்றனர்.மேலும் இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக போராடுகிறோம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக ஒரு இரகசிய திட்டத்தை செயட்படுத்திவருகின்றன.இந்த அறிக்கை இவர்களைப் போலவுள்ள பெயரளவு தேசபற்றலர்களைப் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது.

Backgrounder: Stop Islamization of America - About Pamela Galler


அந்த 7 அறக்கட்டளைகள் வருமாறு...
1. Donors Capital Fund, 
2. Richard Mellon Scaife Foundations,
3. Lynde and Harry Bradley Foundation, 
4. Newton & Rochelle F. Baker Foundation & Charitable Trust,
5. Russell Berrie Foundation,
6. Anchorage Charitable Funds and William Rosenwald Family Fund,
7. Fairbrook Foundation.



 
 ( Very Special Thanks To - Wajahath Ali & Guardian.uk)
 (  Charity List From rehmat1.wordpress.com )



No comments:

Post a Comment