Friday, September 2, 2011

ஒரு தசாப்தம்,இன்றும் தொடரும் குரோதம்.(9/11 & US Muslims)


9/11 தாக்குதல் இடம்பெற்று  வரும் செப்டம்பர் 21 ஆம் திகதியுடன் பத்தாண்டுகள் முடிவடைகின்றது.இத்தாக்குதலின் பின் உலக முஸ்லிம்கள் எதிர்கொண்ட இன்னல்கள் இன்றுவரை தீராது உள்ளன.இந்த தாக்குதல் முஸ்லிம்களால் மேட்கோள்ளப்பட்ட ஒன்றல்ல என்று நிரூபிக்கப்பட்டாலும் பழியோ இன்றும் முஸ்லிகளின் மீதே உள்ளது.இந்த தாக்குதலின் பின் எவ்வாறு உலக முஸ்லிம்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்களோ அதேபோல் அமெரிக்காவில் வாழும் முஸ்லிகளும் பாதிப்புக்குள்ளானார்கள்.அது இன்றுவரை தொடர்வதேன்பதே உண்மை.

"9/11 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் பரவலாக எல்லா இடத்திலும் தீவிர கண்காணிப்புக்கு உள்ளானார்கள்." Dawud Walid, director of the Michigan branch of the Council on American-Islamic Relations (AFP).அமெரிக்கா 9/11 தாக்குதலின் பத்தாண்டு நிறைவை குறிக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் இவ்வேளை அமெரிக்காவில் முஸ்லிம்கள் இனரீதியாக பாரிய பாகுபாட்டை எதிர்நோக்குகின்றனர்.இது சம்பந்தமான புகார்கள் Arab-American Anti-Discrimination Committee ற்கு தினம் தோறும் வருகின்றன,2003 இன் பின் கடந்த ஆண்டே அதிகமான புகார்கள் பெற்ற ஆண்டாக தரவுகள் தெரிவிக்கின்றன.தாக்குதலுக்கு முன் அதாவது 2000 இல்  இம்மாதிரியான புகார்கள் முழு வருடத்திற்கும் 28 டே கிடைத்தது,ஆனால் தாக்குதலின் பின் ஒரு மாதம் கழிய முன் 481 புகார்கள் கிடைத்ததாகவும் தரவுகள் கூறுகின்றது.
(FBI தரவுகள்).

தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக கட்டிடத்துக்கு அருகாமையில் கட்டிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய நிலையமும் பாரிய அளவில் அச்சுரத்தலை எதிர்நோக்கியுள்ளது.இந்த இஸ்லாமிய நிலையம் தொடர்பான சர்ச்சை அமெரிக்க முஸ்லிம்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் பாரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் தற்போது அமெரிக்காவில் பாரிய விவாதப்பொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடியும்.இஸ்லாமிய ஷரியாவினை அமெரிக்காவில் தடை செய்ய சட்டவல்லுனர்கள் பாரிய அளவில் முயற்சிகளை சாய்த்து வருகின்றனர்.

அமெரிக்க முஸ்லிம்கள் இந்த ஆண்டு முதல் தமக்கு காட்டப்பட்டுவரும் இந்த இனப்பாகுபாடுகள் குறையும் என எதிரபார்க்கின்றனர்,காரணம் அல்- கைதா தலைவர் ஒசாமா பின் லாதினின் மரணம்.ஒசாமா பின் லாதின் மற்றும் அவரது அல்- கைதா குழுவினரே இந்த தாக்குதலுக்கு குற்றம் சாட்டப்பட்டனர்(நிருபிக்கப்படவில்லை),எனவே அவரின் மரணம் எதோ ஒரு வகையில் தமக்கு இந்த பிரச்சினையிலிருந்து ஒரு விடிவைத் தரும் என அமெரிக்க முஸ்லிம்கள் கருதுகின்றனர்.என்றாலும் ஒசாமா பின் லாதினின் மரணம் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையப்போவதில்லை என்பது நிதர்சனம்.

ஒசாமா பின் லாதினின் மரணச்செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த அந்த நாள் இரவு Portland இல் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் " ஒசாமா இன்று நாளை இஸ்லாம் " (Today Osama,Tomorrow Islam) என ஒரு வாசகம் பைன்டால் spray பண்ணப்பட்டு இருந்தது.இது இன்னும் அங்கு பாரிய இனப்பாகுபாட்டுக் கொள்கை அங்கே இருப்பதற்கான ஒரு திடமான ஆதாரமாகும்.


அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாம் பற்றியும் அதன் நம்பிக்கைகள்  பற்றியும் மிகவும் சொற்ப அளவிலேயே தெரிந்து வைத்துள்ளதாக ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.ஆனால்  அமெரிக்க முஸ்லிம்கள் மத்தியில் கடந்த மாதம் மேட்கோள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில்,அமெரிக்க முஸ்லிகள் தனது நாட்டை அதிகம் நேசிப்பதாகவும் இந்நாட்டில் தமக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கும் எனவும் அவர்கள் நம்புவாதாகவும் அது தெரிவிக்கிறது.





மேலதிக தகவல் தெரிந்தவர்கள் Comment இடவும்.

Very Special Thanks To Onislam.com

No comments:

Post a Comment