Sunday, September 4, 2011

ஒரே இறைவன் வெவ்வேறு பிரார்த்தனைகள்?

அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எல்லா சமூகத்தவர்களுக்கும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் மூலம் தன்னை எவ்வாறு தொழ(பிரார்த்தனை செய்ய)வேண்டும் என அறிவுருத்தியுள்ளான்.இதற்கு குரானிலும் பல ஆதாரங்கள் உள்ளன.என்றாலும் அந்த தொழுகை முறை எவ்வாறு இருந்தன என்பது பற்றி ஒரு தெளிவான ஆதாரம் நம்மிடையே இல்லை.

கீழுள்ள வசனங்கள் தெளிவாக நமக்கு உணர்த்துவது என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவரகளுக்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்களுக்கு அல்லாஹ் தன்னை தொழுமாறு(பிரார்த்திக்குமாறு) கட்டளையிட்டுள்ளான் என்பது.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு..
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”(14 : 40 )

மூஸா (அலை) அவர்களுக்கு..
“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.(20:14)

ஈஸா (அலை) அவர்களுக்கு..
“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.(19:31)


 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு..
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.(29:45)

இஸ்லாத்தின் பார்வையில் தொழுகை என்பது ஒரு முஸ்லிமின் தலையாய கடமை,மேலும் இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று.தொழுகை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜின் போது சுவர்கத்தில் அருளப்பட்ட ஒரு மாபெரும் பரிசாகும்.இதனாலே தொழுகை எங்களைப் படைத்த ரப்பாகிய அல்லாவுக்கும் அவனை வணங்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு தொடர்பை உருவாக்குகிறது.எனவே தொழுகை என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு அத்தியாவசிய கடமையாகும்.அதனாலே அல்லாஹ் அதன் முக்கியத்துவத்தை திரும்பத் திரும்ப ஒவ்வொரு இடத்திலும் நமக்கு நினைவூட்டுகிறான்.

"நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது."(4:103)

மறுமை நாளில் அல்லாஹ் தன் அடியானிடம் தொழுகையைப் பற்றி கேட்பான்,அப்போது அவனின் தொழுகை சீராக இருந்தால்  எல்லாம் சீராக இருக்கும் மாறாக தொழுகை கேடாக இருந்தால் அவனுக்கு எல்லாம் கேடாகவே இருக்கும்.(தபரானி)

பைபிளின் புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் இறைவனைத் தொழுவது என்பது முகம்குப்புற வீழ்தல்(prostration) என்றே கூறப்பட்டுள்ளது.


  • இப்ராஹீம்(அலை) அவர்களின் வணக்கமுறையை பைபிள் கூறும்போது..
"அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:"(Genesis 17:3)

  • மூசா (அலை) அவர்களின் வணக்கமுறையை பைபிள் கூறும்போது..
"மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:"(Exodus 34:8)

  • ஈஸா (அலை) அவர்களின் வணக்கமுறையை பைபிள் கூறும்போது..
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.(Matthew 26:39)

இவ்வாறே முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த சமூகங்களுக்கு அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் மூலம் எப்படி தொழ வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்பட்டது.ஆனால் நமக்கு வழங்கப்பட்ட ஒருநாளைக்கு ஐந்துவேளை தொழுகை அவர்களுக்கு வழங்கப்பட்டதா ?  என்பது பற்றி பைபிளில் எவ்வித ஆதாரமும் இல்லை.

அறிஞர்களின் கூற்றுப்படி,நபியவர்களின் விண்ணுலக யாத்திரையின் பின் தற்போதுள்ள தொழுகை முறை கட்டாயமாக்கப்பட முன்,அந்த சமூகத்தினருக்கு ஒரு வழிபாட்டு முறை இருந்ததாகவும் அது இரு ரக்காத்துகள் வீதம் மாலையிலும் காலையிலும் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தை காட்டுகின்றனர்

"ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!"(40:55)
 
மேலுள்ள வசனம் நபி மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் தன்னை தொழுமாறு கட்டளையிடும் வசனமாகும்.


அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
மேலதிக விளக்கங்கள் தெரிந்தால் Comment இடவும்.
ஜசாகல்லாஹு ஹைர்.
Special Thanks To Onislam.com

No comments:

Post a Comment