கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் லிப்ய கிளர்ச்சிக் குழுவின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான அப்துல் ஹக்கீம் பல்ஹாஜ் லிப்யா கடாபி ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
ஆனால் இன்னும் அங்கு யுத்தம் நடந்த வண்ணமே உள்ளது.தற்போது லிபியாவின் நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ள தேசிய இடைநிலைக் குழுவில் (National Transitional Council ) அடங்கியுள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கடாபிக்கு ஆதரவான படையுடன் போராடிய வண்ணமே உள்ளனர்.N.T.C. தனது ஆதிக்கத்தைப் லிப்யா முழுவதும் பரப்ப அதிரடியாக முன்னோக்கி சென்றுகொன்றிரிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 26 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அப்துல் ஹகீம் திரிப்போளியின் விடுதலையை அறிவித்த அதேவேளை இந்த போராட்டத்தில் பங்குகொண்டுள்ள அனைத்துக் கிளர்ச்சியாளர்களும் தேசிய இடைநிலைக் குழுவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கிளர்ச்சிக் குழுக்களின் ஆரவாரமான அறிக்கைகள் மற்றும் தேசிய இடைநிலைக் குழுவின் நம்பிக்கை மதிப்பீடுகள் மூலம் எதிர்கால லிப்யா ஒரு புதிய லிப்ய தலைமையின் கீழ் நடத்தப்படவுள்ளது போல் ஒரு தோற்றப்பாடு உருவாகியுள்ளது.அல்-ஜஸீரா தலைமையிலான அரபு ஊடகங்கள்,விடுதலை தேடும் மக்களுக்கும் சர்வாதிகார ஆட்சியாளருக்கும் இடையே இடம்பெற்ற போராட்டத்தில் மூன்றாம் தரப்பினராக இணைந்து கொண்ட அதிபலம் மிக்க தரப்பினரை பற்றிய செய்திகளைப் புறக்கணித்தே வந்தன.அந்த தரப்பினர் தான் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு ( NATO ).இவர்களின் உறுதியான அதி செலவு மிக்க இராணுவச் செலவு ஒன்றும் லிப்ய மக்களுக்காக செய்த நட்பணியல்ல அதுபோல் அதுவொன்றும் தார்மீக செயலுமல்ல.இவர்களின் இந்த நடவடிக்கையை வெறுமனே ஒரு கட்டுரை மூலம் தெளிவுபடுத்த முடியாது.அதுவொன்றும் அவ்வளவு குறுகிய நோக்கம் கொண்ட நடவடிக்கையுமல்ல,நேட்டோவின் இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் தந்திர நோக்கம் கொண்ட பல்வேறுபட்ட விடயங்களைக் கொண்ட ஒரு பன்முகத்தன்மை கொண்ட நடவடிக்கையாகும்.
எனினும் ஆபத்தான இந்த நேட்டோ கூட்டணியிடமிருந்து லிபியாவின் புதிய தலைமை தனது நாட்டை வெகு அவசரமாக நிக்கிக் கொள்ளவில்லை எனின் இந்த கூட்டணியின் உண்மையான நோக்கங்களும் எதிர்பார்ப்புக்களும் இவர்களால் உருவாக்கப்படும் இருண்ட எதிரகாலமும் வெகுவிரைவில் லிபியாவை சூழ்ந்துகொள்ளும் என்பது நிச்சயம்.எனவே மக்கள் இதை தெளிவாக புரிந்து கொள்ள ஊடகங்களில் ஆழமான விவாதங்கள் இடம்பெறவேண்டும்.
லிப்ய மக்கள் சுதந்திரம்,ஜனநாயகம் மற்றும் விடுதலையென தனது உள்ளத்தில் நிலைநிறுத்தி தனது நாட்டு சர்வாதிகாரிக்கேதிராக போராடி வெகுதொலைவில் இருந்த விடுதலைக்காக தனது உயிரை கொடுத்துக்கொண்டிருந்த போது கொலைகார நேட்டூவோ தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்பட்டு வந்தது.
ஏறிக் வால்பேர்க் ( Eric Walberg ) என்பவர் அண்மையில் வெளியிட்ட "பின்நவீனத்துவ ஏகாதிபத்தியம் - புவிசார் அரசியல் மற்றும் மாபெரும் போட்டி"( "Postmodern Imperialism: Geopolitics and the Great Game,")என்ற புத்தகத்தில் பனிப்போரின் இறுதியின் போது நேட்டோவின் பங்கை அவர் தெளிவாகஅட்டவனைப்படுத்தியுள்ளார். நேட்டோ சர்வாதிகார வல்லரசுகளின் இராணுவ இருப்பை உலகெங்கும் விஸ்தரிக்க விரைவாக செயற்படும் ஒரு கருவியாக தற்போது மாற்றியுள்ளது.எங்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிட முடியாது என்று அறிக்கை விடுமோ அங்கு ஐக்கிய அமெரிக்காவின் தலையீட்டை இலகுபடுத்த நேட்டோ வெகு விரைவாக செயற்படும்.இந்த நிலைமையை நாம் யுகோஸ்லாவியா,ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அவதானித்தோம்.தற்போது இது லிப்யாவில் நடந்துகொண்டிருக்கிறது.
கடந்த இரு தசாப்த காலங்களாக நேட்டோ தனது "அமைதிக்கான கூட்டை" விரிவாக பாரிய முயற்சிகளை எடுத்தது,அதன் அடிப்படையில் நேட்டோ தனது கூட்டணிக்குள் புதிய நாடுகளை சேர்த்தது.மேலும் இதற்காக நேட்டோ பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் நடத்தி தனது புகோளரீதியான இருப்பையும் உலக சமாதானத்தில்??? தனது பங்கையும் நிலைநிறுத்தி வந்தது."லிப்யாவில் நேட்டோவின் வெற்றி"-"விமானம் மூலம் ஆட்சி மாற்றம்"இது நேட்டோ அதிக விலை கொடுத்து வாங்கிய வெற்றியாகும் நிச்சயம் அது அதற்கான இலாபத்தை லிப்யா மூலம் பெற்றுக்கொள்ளும்.
லிப்யாவில் நேட்டோவின் ஆக்கிரமிப்பு ஒரு அரசியல் மற்றும் இராணுவ ரீதியான கோட்பாட்டை ஒட்டியே இடம்பெற்றுள்ளது,அது நேட்டோவுக்குரிய ஒரு சித்தாந்தமாக இருக்கலாம்.இந்த கோட்பாடு குறித்து ஒபாமா உட்பட மேற்கு தலைவர்கள் பல இடங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.ஒபாமா கடந்த 22 இல் வெளியிட்ட ஊடக அறிக்கையில் " நேட்டோ உலகின் திறனுடைய கூட்டணி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்கொண்டிருக்கிறது,அதற்கு அந்த பலத்தை இரு மூலங்களிருந்து பெறுகிறது அவை ஒன்று அதன் இராணுவ பலம் மற்றது நம் ஜனநாயக சிந்தனைகள் ஆகும்".நேட்டோவின் இந்த அராஜக மனப்பான்மை எப்படி ஜனநாயகம் ஆனதேன்பதை புரிய மிகவும் கஷ்டமாக இருக்கிறது.ஒபாமாவின் இந்த தருதல அறிக்கைக்கும் முன்னால் அமெரிக்க அராஜகன் புஷ் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் ஆக்கிரமிப்புக்குலாக்கி நேட்டோ புகழ் பாடி அவன் விட்ட அறிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்று லிப்யாவையும் நேட்டோ தனது இராணுவ தளமாக தற்போது மாற்றிவருவதாக ஐக்கிய அமெரிக்க மற்றும் நேட்டோ அங்கத்தவ நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் பெரும்பாலான லிப்ய மக்கள் இதை நிச்சயம் ஏற்கவும் மாற்றார்கள் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.எனினும் நேட்டோ தலைவர்களின் கூற்றுக்கள் மற்றும் தற்போதுள்ள லிப்ய நிர்வாகத்துடன் அவர்கள் நடந்துகொள்ளும் முறையும் ஏற்கனவே அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம் நாடுகளில் நடந்துகொண்ட முறையை ஒத்ததாகவே உள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளிண்டன் அண்மையில் உடகங்களுக்கு வெளியிட்ட ஊடக அறிக்கை மேற்கத்தைய ஊடகங்களில் பரவலாக வாசிக்கப்பட்டது.புதிய லிப்யா சர்வதேச சமூகத்துக்கு முன் வருவதற்குள் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகள் பல சட்டங்களை லிப்யா மீது திணித்துவிட்டது.ஹிலரி விட்ட அறிக்கையில் லிப்யா ஒப்பந்தத்தில் உள்ள பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் அதன் ஆயுதங்களைக் கொண்டு அண்டை நாடுகள் மீது அச்சுரத்தல்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அதன் ஆயதங்கள் தீயோர்களின் கையில் சிக்காதவாறு பாதுகாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.மிக முக்கியமாக நாட்டில் வன்முறைத் தீவிரவாதம் தலையெடுக்க விடாமல் நாட்டை பாதுகாக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.
இங்கு மிக மோசமான விடயம் என்னவெனில் நேட்டோ லிப்யாவில் விளையாடிய புதிய விளையாட்டில் ஏற்கனவே அல்-கைதா எனும் அட்டை மிகவும் திறமையாக பாவிக்கப்பட்டுள்ளது.இந்த அட்டையின் பயன்பாடு லிப்யாவில் ஒருவாகப் போகும் புதிய நிர்வாகத்தின் அரசியல் அணுகுமுறையை பொறுத்தே பயன்படும்.
லிப்யா எழுச்சியில் உள்ள அல்-கைதாவின் ஈடுபாடு ஒன்றும் புதிதல்ல.British Telegraph பத்திரிகையில் (August-26) அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவரான James Stavridis (NATO commander and U.S. Admiral) சொன்ன ஒரு முக்கியமான ஒரு விடயம் வெளியானது அவர் சொன்ன விடயம் என்னவெனில் " லிப்யா கிளர்ச்சிக் குழுக்களில் பல அல்-கைதா போராளிகள் காணப்படுகின்றனர்.".இந்த செய்தி மிகச் சின்னதாக இருந்தாலும் இதனூடாக அவர்கள் எதிர்பார்க்கும் விடயம் மிகவும் பரந்தது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் நாசகார அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்துள்ள லிபியாவின் அண்டை நாடான அல்ஜீரியா லிபியாவின் தேசிய இடைநிலைக் குழுவை அங்கீகரிக்க மறுத்துள்ளது.இது நேட்டோ லிப்யாவில் விளையாடும் விளையாட்டின் முதல் அட்டை (Card) நகர்வாக அவதானிக்கலாம்.
தீவிரமாக போராட வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்க மற்றும் நேட்டோ ஆதரவைப் பெற முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும்.மேலும் மேலை நாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள லிபியாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை விடுவிக்க மறுப்பது லிபியாவின் புதிய நிர்வாகத்துக்கு பெரிய சவாலாக இருக்கும் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.
நேட்டோ ஒருவேளை தனது புதிய லிப்ய திட்டத்தில் தோல்வி அடைந்தால்,அந்த தோல்வி நேட்டோவுக்கு அரபுலகில் உள்ள நலன்களை வரிசையாக வீழ்த்திவிடும்.இதை நன்றாக நேட்டோ.மேலும் ஒபாமாவின் இராணுவ பலம் மற்றும் ஜனநாயக சிந்தனைகளின் கலவைகளும் பாதிக்கும்.
தற்போது நேட்டோவின் பிரதான அறிவுஜீவிகள் நேட்டோவுக்கும் புதிய லிபியாவுக்கும் இடையே இணைப்புக்களை உருவாக்க திட்டங்களை வகுத்தவண்ணம் உள்ளன.
John F Burns ஆகஸ்ட் 22 திகதி New York Times பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையில்,கடாபிக்குப் பிறகு லிபியாவின் நிலைமையும் சதாமுக்குப் பிறகு உருவான ஈராக்கின் நிலைமையும் ஆச்சரியம் தரும் வகையில் ஒத்த பண்புகளையே கொண்டிருக்கிறதாக எழுதியுள்ளார்."Parallels Between Qaddafi and Hussein Raise Anxiety for Western Leaders," என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையில் அவர் மேலும் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்துள்ளார்.
எனினும் அராபிய ஊடக வலையமைப்பை அவதானிக்கும் பொழுது,நேட்டோ சம்பந்தமாக முற்றிலும் மாறுபட்ட தொற்றப்பாடையே ஒளிபரப்புகிறது.அந்த ஊடகங்கள் நேட்டோ லிப்ய மக்களின் ஒரு சிறந்த நண்பன் எனவும் லிப்ய மக்கள் நேட்டோவுக்கு வாழ்நாள் பூராகவும் கடமைப்பட்டிரப்பதாகவும் செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.சில Pan-Arab
சேனல்கள் பிழையான தர்க்கங்களை ஒளிபரப்பிவருகின்றன.நேட்டோ இவற்றை நன்றாகவே பயன்படுத்துகிறது எனலாம்.இவர்களின் இந்த பொறுப்பற்ற நடவடிக்கை சிரியாவில் பாரிய விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும்.ஏற்கனவே அல் அசாதின் கொடுமைகளால் துன்பப்படும் மக்கள் நேட்டோவாலும் துன்பப்பட நேரிடும்.இவர்களின் இந்த செயல்கள் அராபிய எழுச்சியை ஒரு முடிவில்லா குளிர் காலத்துக்கு இட்டுச்சென்று விடும்.
லிபியாவுக்கு நேட்டோவின் உண்மையான நோக்கத்தை வெகு விரைவில் உணர்ந்துகொள்ள முடிந்தால்,நேட்டோ அராபிய எழுச்சிகளை இடையில் வந்து குழப்பிவிட்டு அவ்வெழுச்சியை தன் பக்கம் திருப்பிக்கொள்ளும் கபட நாடகத்தை உணர்ந்துகொள்ள முடிந்தால் நிச்சயம் லிப்யா முழு உலகுக்கும் முன்மாதிரியாக இருக்கும்.
இது மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையாகும்.மொழிபெயர்ப்பில் பிழைகள் இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும்.
உங்கள் நண்பன் - எம்.ஹிமாஸ் நிலார்.
Ramzy Baroud என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை முதன் முதலாக Iviews.com என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதாகும்.
No comments:
Post a Comment