Thursday, June 30, 2011

மால்கம் X அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் ஒரு மைல் கல்



  இஸ்லாமிய கொள்கையை  ஏற்று அதை முன்வைத்து   அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய இஸ்லாமிய சாத்வீ க போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X – Malcolm X- கொலை செய்ய பலமுறை FBI முயற்சிச் செய்தது இறுதியாக  1965 ஆம் ஆண்டு தனது புரட்சி கரமான இஸ்லாமிய உரை ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் X ஒருவனால்  சுட்டு கொல்லபட்டார்  சுட்டு கொன்றவன் தோமஸ் ஹாகன் இவன்  அண்மையில்  சிறையிலிருந்து விடுதலையானான் . ஆனாலும் மால்கம் Xஸின் கொலைக்கு பின்னால்  யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைக்க வில்லை  .


அமெரிக்காவில்  மோசமான குடும்பத்தில்  பிறந்தார் மால்கம் X . இவரின் ஆரம்ப வாலிபம்  வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். கல்வி  நின்று போனது. போதைப் போதை பொருட்களுக்கு அடிமையானார் சிறை சென்றார் சிறையில் இஸ்லாத்தை விளங்கும் வாய்ப்பு கிட்டியது மிக தீவிரமாக கற்றார் இஸ்லாமிய கொள்கையை ஏற்றுகொண்டார் விரிவாக பார்க்க அதன் அடிப்டையில் தனது வாழ்கையை அமைத்து கொண்ட இவர் நிறவெறியையும் , கருப்பு இனம் மீதான அடக்குமுறைகளையும் , உரிமை மறுப்புகளையும் இஸ்லாத்தை அடிப்டையாக கொண்டு எதிர்த்தார் அமெரிக்காவின் கருப்பு இனம் முழுவதும் இவரின் பின்னால் சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்படும் அளவுக்கு மக்கள் இவர் பின்னால் திரண்டனர் FBI குறிவைத்து கொலை செய்யதுவிட துடித்து இறுதியில் .. கொலை செய்யப்பட்டார் அமெரிக்க இஸ்லாமிய எழுச்சியின் அத்திவாரம் தகர்க்கப்பட்டதாக கருதியது


 மால்கம் X இன் இறுதி நாட்கள்

  மால்கம் x இன் திரைப்படத்தின் இறுதி காட்சிகள் 

Wednesday, June 29, 2011

அமெரிக்க உடகங்களும் - பலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சனையும்

 இந்தக் கானொளியில் இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சனை எப்படி அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன என்று தெளிவாக ஆராய்கிறது.பிரித்தானிய ஊடகங்கள் நடுநிலையாக நடந்தாலும் அமெரிக்க ஊடகங்களின் நடுநிலைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்னைக்கு இன்று அறுபத்தைந்து வருடங்களாகியும் இதுவரை அமெரிக்க ஊடகங்களில் " ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பூமி " என்ற சொல்  வெறும் 4 வீதமான  அளவே பாவிக்கப்பட்டுள்ளது.

Sit back and watch this video to truly understand how Israel manage to control Palestinians and Americans alike. How Israel control American media for its own purpose. 

Tuesday, June 28, 2011

ஒலிம்பிக் சின்னம் - ஒழிந்திருக்கும் மர்மம்

 
NOTE : இது  ஒருஇந்த கானொளியில் சியோனிசத்தின் புதிய உலகுக்கான பிரகடனம் மற்றும் இலுமினாடிகளின் வழிபாட்டுச் சின்னங்கள் என்பன அடங்கியுள்ளன. கிருஸ்துவ நண்பர் உருவாக்கிய காணோளியாகும்.

Walt Disney அறிந்து கொள்ளுங்கள்


  சிறுவர் பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு டிஸ்னி பெயர்பெற்றது.அவர்களின் திரைப்படங்கள் சிறுவர்களை இலகுவாக கவரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும்,ஆனால் நாம் அவற்றில் அடங்கியுள்ள சாத்தானிய குறீடுகள், பாலியல் சம்பந்தமான விடயங்கள் என்பவற்றை கவனிக்கத்தவரிவிடுகிறோம்.கீழுள்ள காணொளிகளை கவனமாக பாருங்கள்,தெளிவு பெறுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாமிய விடயங்களை எத்திவையுங்கள்.

மேலே காணப்படும் 666 என்பது பைபிளின் கருத்துப்படி அண்டி கிருஸ்துவான தஜ்ஜாலைக் குறிக்கும்.இது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டுளேன்.வாசிக்கவும்.[ 666 -  பார்கோடு ரகசியம் ]



 

சாத்தானிய டிஸ்னியின் சில சில்மிசங்கள் [ video ]

                                 டிஸ்னி பற்றி தெளிவாக சொல்லும் காணொளி


                               கிருஸ்தவ பாதிரியார் ஒருவர் டிஸ்னி பற்றி.........



எனவே வன்முறை, பாலியல் உறவுகள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் சாத்தானிய இலுமிநாடி டிச்னியிடமிருந்து நம் எதிர்கால சிறுவர் மற்றும் இளைய சமூகத்தை பாதுகாப்போமாக.ஆமீன்

Sunday, June 26, 2011

இஸ்லாமோ ஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 6)

இக்கட்டுரை தொடர் 2008 இல் வெளியனதாகும்.


இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகள்:

சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாத்தினை எதிர்ப்பவர்களின் குறி, முஸ்லிம்களை உடல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும், இழித்துப் பேசுவதும் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதுமாகும். அதில் மிகவும் குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதிக்கும் பள்ளிவாயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை மற்றும் அவற்றின் மீதான அவதூறு பரப்புவதுமான இஸ்லாமோஃபோபியா என்பதன் அடிப்படையைச் சென்ற தொடரில் பார்த்தோம்.
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அநியாயமான முறையில் வேலை வாய்ப்புகளிலும் அரசியலிலும் உயர் பதவிகள் திட்டமிட்டே மறுக்கப்படுகின்றன. இஸ்லாமோஃபோபியா என்பது விஷமப் பாகுபாட்டைச் சமுதாயத்தில் விதைக்கும் அநீதிமிக்க ஊடகங்களாலும் எழுத்துக்களாலும் இஸ்லாத்திற்கு எதிராக திட்டமிட்டுப் பரிமாறப்படும் வன்முறைகளையும் சில உதாரணங்கள் மூலம் விளக்கலாம்.

உலக முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களை கேலியாக்கி சித்தரித்து பன்னிரண்டு கேலிச்சித்திரங்களை டென்மார்க்கின் அதிக சர்க்குலேஷன் கொண்ட யில்லன்ஸ்-போஸ்ட்டன் கடந்த செப்டம்பர் 30, 2005 இல் வெளியிட்டது. அதில் ஒரு சித்திரத்தில் தலைப்பாகையில் வெடிகுண்டை வைத்திருப்பதாகக் காட்டி தன் அடிமன வக்கிரத்தை தீர்த்துக்கொண்டது...

வெள்ளிக்கிழமை ஜூன் 3, 2005 அன்று கியூபாவின் குவாண்டனாமோ சிறை வளாகத்தில் புனிதக் குர்ஆனின் பிரதிகளை அமெரிக்கச் சிறைச்சாலை நிர்வாகிகளே அழித்து சிதைத்ததைச் சிறைச்சாலையின் கமாண்டரான பிரிகேடியர் ஜெனரல் ஜே ஹூட் ஒப்புக்கொண்டது...

இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைகளை ஆதாரமின்றியும் துவேஷப்பார்வையுடன் விமர்சித்த, உலக முஸ்லிம்களின் மனதை ஒரு சேரக் காயப்படுத்திய 59 வயதான சல்மான் ருஷ்டிக்கு, பிரிட்டனின் இரண்டாவது எலிசபெத் விருது வழங்கி கெளரவப்படுத்தியது....

பொது இடங்களில் ஊடகங்கள் பார்வையில் குர்ஆன் பிரதிகள் எரித்து, கிழித்தெறியப்பட்டது....





தாடி வைத்தவர்கள் பயங்கரவாதிகள் தான் என்ற முன்முடிவோடு லாஸ் ஏஞ்சல்ஸ், ஆம்ஸ்டர்டாம், லண்டன், பாரிஸ் போன்ற விமானநிலையங்களில் முஸ்லிம் பயணிகளை அதீதமாக ஆராய்ந்தது...

விமான நிலையத்தில் தொழுதவர்கள் எல்லாம் நிச்சயம் பயங்கரவாதியே என்று அவர்களைக் கைது செய்து லண்டன் விமானத்தில் உளவியல், உடலியல் ரீதியிலான சித்திரவதைகள் செய்தது...

பட்டியலில் நீளும் இவை எல்லாமே இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகள் என்பதை ஓரளவு விஷயமறிந்தவர்கள் தெரிந்து கொண்டாலும் இடைவிடாத ஊடகப் பொய்ப்பிரச்சாரம் சாமானியர்களையும் நம்ப வைத்துள்ளது.

இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் கலந்த உணர்வினால் உத்வேகப்படுத்தப்பட்டவர்கள் மனதாலும் உடலாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களின் சதவீதம் ஃப்ரான்ஸ், டென்மார்க், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் அதிகம் கூறப்பட்டாலும் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் ஸ்ரீலங்காவில் நடக்கும் நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் எல்லா இடங்களிலும் இஸ்லாமோஃபோபியா தலைவிரித்து ஆடுவதைக் கண்கூடாகக் காண இயலும்.

முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகையத் தாக்குதல்கள் பற்றிய வெகு சமீபத்தில் வளர்ந்த நாடுகளின் பட்டியலையும், அங்கே நடக்கும் நிகழ்வுகளையும் ஆராயும்போது அதில் சமீபமாக இடம் பெறுபவை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, இத்தாலி, நெதர்லாந்த் மற்றும் ஸ்பெயின் என்பதையும் அறிய முடிகிறது.

ஆக, சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா எனப்படும் மனநோயை, வெற்றிகரமாக முஸ்லிம் அல்லாதவர்களிடம் திட்டமிட்டு பரப்பும் எண்ணம் கொண்டவர்களின் காரியத்தில் அவர்கள் எண்ணியபடி பலன் கிட்டியுள்ளது என்று கூறலாம்.

சரி இதனால் என்ன பலன்? என்ன அழுத்தமாகப் பதிய வைக்கப்படுகிறது?

1. வெள்ளைச் சருமம் கொண்ட முஸ்லிமல்லாதோர் அனைவரும் நல்லவர்.
2. முஸ்லிம்களில் வழிபாடுகளைச் சரிவரச் செய்வோர் (Practicing Muslims) அனைவரும் பயங்கரவாதிகள்.
3. இஸ்ரேல் தற்காப்பு மட்டுமே புரிகிறது.
4. இஸ்ரேலுக்கு உதவி தேவை.
5. இஸ்ரேலின் பாதுகாப்புக்குப் பெயரளவிலும் அச்சுறுத்தல் கூடாது.
6. பாலஸ்தீன விடுதலை என்று எவர் பேசினாலும் அவர் பயங்கரவாதி.
7. உலகின் கோலோச்சத் தகுதி உடையவர் வெள்ளைச் சருமம் கொண்டோரே!

குடியரசின் பிறப்பிடமாகத் தன்னைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா இது போன்ற நிறவெறிக் கொள்கையை நிலை நிறுத்தப் போராடுகிறதா? அமெரிக்க வெறுப்பு தான் இக்கட்டுரையில் தெரிவதாக இதைப் படிக்கும் வாசகர்களில் சிலருக்கு எண்ணம் தோன்றக்கூடும்.


நிறவெறி ஒழிக்கப்பட்டுவிட்டதாக முழங்கப்படும் இன்று "வெள்ளையர்கள் அமெரிக்காவின் சிறுபான்மையினர் ஆகப் போகின்றனர்" என்ற பெரும் ஊடகங்களின் அலறல் எதைக் காட்டுகிறது? வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தப் பிறந்தவர்கள் என்ற அவர்களின் மன நினையைத் தானே?

படைத்தவன் முன்னிலையில் மனித இனம் முழுவதும் சமமே! எந்த இனமோ, கோத்திரமோ, மொழியோ ஒன்றை விட ஒன்று தாழ்ந்ததுமில்லை; உயர்ந்ததுமில்லை என உரக்க மனித அடிப்படை உரிமை முழக்கமிடும் இஸ்லாம் எல்லாவித ஆதிக்கத்துக்கும் சாவுமணி அடித்துவிடும் என்ற அதீத அச்சத்தில் தான் இஸ்லாமிய எதிர்ப்பும் பரப்பப்படுகிறது. இந்தியாவில் மேல்சாதியினர் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பிரிவினரின் ஆதிக்கத்தை ஒழித்து விடும் என்ற அச்சத்தில் தான் இஸ்லாத்தின் மீதான காழ்ப்புப் பொய்கள் கட்டவிழ்த்துவிடப் படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள அதிக நுண்ணறிவு தேவையில்லை.

திட்டமிட்டு குறிவைக்கப்படும் இஸ்லாமிய அடையாளங்கள்:

இஸ்லாம் உலகை ஆண்டுவிடக் கூடாது என்ற எண்ணமே இஸ்லாமோஃபோபியாவின் அடிப்படை காரணம். ஒன்றின் மீதான திட்டமிட்டப் பொய்பிரச்சாரம் அதனை மக்கள் மத்தியில் வேகமாகப் பரவ வைக்கின்றது என்பதற்கு இஸ்லாத்தின் மீதான திட்டமிட்டப் பொய் பிரச்சாரமும் அதனை அநாயசமாக எதிர்கொண்டு மக்களிடையே வேகமாக வளரும் இஸ்லாமுமே சாட்சி.

தீவிர பொய்பிரச்சாரங்களையும் எதிர்கொண்டு மக்களிடயே இஸ்லாம் வளர்வதற்கான மற்றொரு காரணம், இஸ்லாமிய அடையாளங்கள் வெளியே தெரியும் விதத்தில் முஸ்லிம்கள் தங்களின் நடை,உடை, பாவனைகளை அமைத்துக் கொள்வதும் ஆகும்.
பரவலாக முஸ்லிம் ஆண்கள் வைத்துக் கொள்ளும் தாடி, கரண்டை காலுக்கு மேலே அணியும் உடை, பெண்கள் தங்களின் உடலை மறைத்து அணியும் ஆடை(ஹிஜாப்/பர்தா) போன்ற இன்னபிற இஸ்லாமிய அடையாளங்கள் கூட ஒரு வகையில் மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்ட வழிவகுக்கின்றன.

இத்தகைய அடையாளங்களைப் பயங்கரவாதத்தோடும் தீவிரவாதத்தோடும் தொடர்பு படுத்த இயைந்து விட்டால், இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையை அணைபோட்டுத் தடுத்து விடலாம் என்ற மனப்பாலே, இஸ்லாமிய அடையாளங்களின் மீதான திட்டமிட்ட தாக்குதலுக்கு அடைப்படைக் காரணமாகும்.

அந்த வகையில் இன்று உலகில், இஸ்லாமிய பெண்டிர் அணியும் பர்தா அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்குமான அடையாளமாக வலிந்து உருவாக்கப்படுகிறது.

இஸ்லாமோஃபோபியாவின் தற்போதைய இலக்கு - ஹிஜாப்!

பள்ளியில் பயிலும் முஸ்லிம் பெண்கள் தலை முடியை மறைத்து அணியும் ஸ்கார்ஃப் கிளப்பிய உறுத்தலின் காரணத்தாலேயே செக்யூலரிஸம் பேசும் ஃபிரான்ஸில் இஸ்லாமோஃபோபிக் சட்டம் (Law 2004-228 of March 15, 2004) இயற்றப்பட்டது. மத ரீதியிலான குறியீடுகளை பகிரங்கமாக காண்பிக்கக்கூடாது(?) என்பதே இச்சட்டத்தின் உட்கருத்தாகும். பல்சமயக்கலாச்சாரத்தை (MultiCultural Paradigm for co-existence) உட்கொண்ட நாடு என்று பெருமை பேசும் ஃபிரான்ஸ் தனது இயலாமையை இவ்வாறே வெளிப்படுத்தி சிறுமைப்பட்டது.

கிறிஸ்துவர்கள் அணியும் சிலுவையையோ, யூதர்கள் அணியும் தொப்பியையோ குறை சொல்லி இழிவு செய்ய முனையாத ஒருவர் ஒரு முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிவதை மறுக்கிறார் எனில் அவருக்கு இஸ்லாமோஃபோபியா எனும் மனநோய் தொற்றி விட்டதாக அர்த்தப்படுத்தலாம்.

இஸ்லாமோஃபோபிக் செயல்முறை கொள்கைகளின் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது ஹிஜாப் பற்றியதே. இதை இஸ்லாமிய எதிர்ப்புப் பணியாளர்கள் இஸ்லாமிய சின்னம் என்று காழ்ப்புணர்ச்சியுடன் வர்ணிப்பதுண்டு. ஜெர்மனியில் ஹிஜாப் அணிவதற்கான தடையுத்தரவு ஆகஸ்ட் 2006 இல் பிறப்பிக்கப்பட்ட போது மத அடிப்படையிலான ஹிஜாப் அணியும் கலாச்சாரத்தின் மூலம், பள்ளி வளாகத்தில் பிற மதத்தினருக்கு இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவேதான் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று ஜெர்மனின் பள்ளிகளுக்கான அமைச்சர் பார்பரா ஸோம்மர் கூறியிருந்தார்.

தெற்காசிய நாடுகளைச் சிறிது கவனித்தால் அங்குள்ள நிலைமைகளையும் உணரலாம். ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணமான பதுல்லவில் உள்ள ஓர் அரசாங்கப் பள்ளியில் இரு முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அத்தோடு நில்லாமல் - பர்தா விஷயத்தில் பதைத்துப்போன - தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைச்சரான S. சச்சிதானந்தன், குறிப்பிட்ட அந்த அரசாங்கப் பள்ளியை 'இந்துப் பெண்கள் பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இந்துக்களும் பெளத்தர்களும் பெரும்பான்மையினராகக் கல்வி பயிலும் அப்பள்ளியில் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் முஸ்லிகள் என்பதே அப்பதைபதைப்பிற்குக் காரணம்: (
http://www.muslimedia.com/archives/world99/sri-hijab.htm)

இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதால் உலகில் இஸ்லாமோஃபோபியாவினால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளுக்கு ஏற்படும் மனப்பிரளயமும் இத்தகையவர்கள் மூலம் ஹிஜாப் அணிபவர்கள் அடையும் கொடுமைகளும் சொல்லி மாளாது. 
 

ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியாக சமூக சேவை புரிந்து உலக மக்கள் மனதில் இடம் பெற்ற அன்னை தெரஸா மற்றும் நம் குடியரசுத் தலைவர் திருமதி. பிரதிபா பட்டேல் அணியும் இஸ்லாம் கூறும் ஹிஜாப் படத்தையும் இவ்விடத்தில் இணைப்பது பொருத்தமாக இருக்கும். இவர்கள் ஹிஜாப் அணிந்துள்ளார்கள் என்பதையோ, இதைக் கடுமையாகச் சாட வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோ So Called பெண்ணியவாதி(!)களுக்குத் தோன்றாததற்குக் காரணம் இவர் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதே!






ARTICLE BY ABU SALIHA [ SATHYAMARGAM ] 

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 5)


இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை:-

1. இஸ்லாம் - சகிப்புத்தன்மையற்ற, வன்முறையைத் தூண்டக்கூடிய, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரான அணுகுமுறை கொண்ட மதம். எனவே அமெரிக்க அரசியலமைப்பிற்குள் எக்காரணம் கொண்டும் அதனை அனுமதிக்கப்படக்கூடாது. அதேவேளை உலகில் எந்த ஒரு நாட்டின் அரசியலமைப்பிற்குள்ளும் எவ்வகையிலும் அதிகாரம் செலுத்துவதையும் அனுமதித்து விடக்கூடாது.

2. பொதுவான முஸ்லிம்களைவிட இஸ்லாத்தை உறுதியாகப் பின்பற்றும் "அடிப்படைவாத" முஸ்லிம்களே முதன்முதலில் "கவனிக்கத்"தக்கவர்களும் கண்டிக்கத்தக்கவர்களும் ஆவர்.
இவ்விரு திட்டங்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களில் ஏகாதிபத்திய சக்திகள் செய்த காரியங்கள் பலவாகும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் நுழைந்து விடாமல் கவனித்துக் கொள்வதிலிருந்து, இன்று முஸ்லிம் நாடுகள் என அறியப்படும் நாடுகளின் மீது அழுத்தம் கொடுத்து அங்கு நிலுவையில் இருக்கும் இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாற்றுவதற்குத் தங்களின் கைக்கூலிகளை வைத்து காய்கள் நகர்த்தியது வரை பல காரியங்களை செய்து முடித்துள்ளனர்.
செப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அதனை காரணமாக வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் வாழமுயலும் நாடுகளையும் அழித்தொழிக்கத் திட்டங்கள் தீட்டி நடைமுறைப் படுத்தப்பட்டது உலகம் அறியும். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ரம்ஸ்ஃபெல்டு இவ்விரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா உடனடியாக யுத்தம் செய்து அழிக்க வேண்டிய நாடுகளாக பட்டியல் இட்டு பரிந்துரைத்த நாடுகள் இவை: ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, இரான், சூடான். 100 விழுக்காடு சியோனிஸ ஆதரவு நிலைபாடு கொண்ட ரம்ஸ்ஃபெல்டின் பரிந்துரையில் உள்ள இரு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கப்பட்டதும் அடுத்து இரானையும் சிரியாவையும் தற்பொழுது அமெரிக்கா குறிவைத்துள்ளதையும் இணைத்துப் பார்த்தால் மேற்கண்ட இரு திட்டங்களை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயல்வதன் தீவிரம் புரியும்.
சில முஸ்லிம் நாடுகளில், அரசு அவைகளின் வேலை துவக்கத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதலான "பிஸ்மில்லாஹ்" இறைவனின் திருநாமத்தில் துவங்குகின்றோம் என்பதைக் கூறித் துவங்குவது நடைமுறையாகும். இந்த நடைமுறையை கத்தர் நாடாளுமன்ற நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்து எடுத்து மாற்ற வேண்டும் என அமெரிக்கா ஓரிரு வருடங்களுக்கு முன்பு நேரடியாகவே அறிக்கை வெளியிட்டதும் இதனோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே.
இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துவதும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் விதத்தில் தங்களின் உறுதியான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் இமாம்கள் போன்றோரை சிறைகளில் அடைப்பதும் இத்திட்டங்களின் உட்பட்டதே. இவற்றிற்கு மிகப்பலமான உதாரணமாக, அமெரிக்காவில் தனது தீவிர இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயர்த்தும் இரு கண்களும் இழந்த இமாம் யூசுஃப் அப்துல் ரஹ்மான் அவர்களை முறையான எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியாமல் விசாரணை ஏதுமின்றி பல வருடங்களாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராகத் தேர்ந்தெடுத்த சிறப்பிற்குரிய இமாம் யூசுஃப் அல் கர்ளாவி அவர்களை அமெரிக்காவில் நுழைய விடாமல் அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து வைத்திருப்பதையும் கூறலாம்.
இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்திற்கு தாங்கள் உட்பட்டது மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அந்த வரையறைக்குள் கொண்டு வர இத்திட்டங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏகாதிபத்திய சக்திகள் எடுத்து வருகின்றன. இத்தகைய இஸ்லாத்தின் மீதான அச்சத்தை மக்களிடையே பரப்புவதற்காகவும் தேர்ந்த ஊடக குழுக்களையும் இவர்கள் உருவாக்கி விட்டுள்ளனர்.

சாயம் வெளுக்கும் முழுநேர இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள்
 
முழு நேர இஸ்லாமிய எதிர்ப்பு ஆக்கங்களை எழுதுபவரான எழுத்தாளர் பால் பெர்ரி, தனது நூலில் (Infiltration: How Muslim Spies and Subversives have Penetrated Washington), குர் ஆனை முழுமையாக வாசித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ளவும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை வாசித்து அறிந்து கொள்ளவும் பெண்டகனின் நுண்ணறிவு செயலாண்மை நிர்வாகம், அதாவது Counterintelligence Field Activity (CIFA) வகுத்த செயல்முறைத் திட்டத்தையும் பற்றிப் பேசுகிறார்.
"இப்படியே விட்டால் இஸ்லாம் உலகை ஆளும் என்ற மிரட்டலையும், ஜக்காத் பணம் என்பது போருக்கான தயாரிப்புகளுக்கு பயன்படும் தர்மம்" (zakat, an asymmetrical war-fighting funding mechanism) என்று மேற்குலகைத் திசை திருப்பும் விதமாக பால் பெர்ரி குறிப்பிட்டிருப்பது அவரின் வெளிப்படையான துவேஷப் பார்வைக்கு ஓர் உதாரணம் எனலாம். இவரைப் போன்றே தர்க்க ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் எழுதக்கூடியவர்கள் என்று பெயர் பெற்ற பல இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள், அடிப்படையை விளங்கவியலா உளவியல் தன்மையில் சிக்கியிருப்பதைக் காணமுடிகின்றது.

ஆன்லைன் புத்தக விற்பனையில் முதலிடம் வகிக்கும் அமேசான்.காம் தளத்தின் அதிகம் விற்கும் பிரதிகளில் இஸ்லாம் பற்றிய புத்தகங்களே முதல் 30 இடங்களைப் பிடித்துள்ளன. இஸ்லாத்தைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குர்ஆனை வாங்கிப்படிக்க பலர் வருமிடத்தில் நடுநிலையாளர்களின் இஸ்லாம் பற்றிய ஆய்வு நூல்களுடன் காழ்ப்புணர்வை குரோதத்துடன் தெளிக்கும் ராபர்ட் ஸ்பென்ஸர், டேவிட் ஹாரோவிட்ஜ், டோனி ப்ளாங்க்லே, ஸ்டீவன் எமர்ஸன் போன்றோரின் நூல்களும் காணப்படும். அவற்றில் தூவப் பட்டிருக்கும் துவேஷ வித்துகளை, நடுநிலை நோக்குடன் அணுகும் எவரும் அவை அமெரிக்கத் தலைமையைக் குளிர்விக்க இவர்கள் செய்த (விஷப்)பனித்தூவிய விவசாயம் என மிக எளிதில் கண்டுகொள்ள இயலும்.

இஸ்லாமின் மேலுள்ள ஆழமான வெறுப்பின் மூலம் எழுத முன்வரும் இத்தகைய நியமிக்கப்பட்ட எழுத்தாளர்கள், பல நேரங்களில் இஸ்லாமிய அடிப்படைகளைக்கூட அறிந்து வைத்திருக்கவில்லை என்பதைப் பல்வேறு இடங்களில் கண்கூடாக காண முடியும். பண்பற்ற முறையில் மனிதத்தன்மையை இழந்து மனிதர்களிடையே வெறுப்பை வளர்த்து பகைமையை ஊட்ட எந்த அளவு சேவை செய்ய இயலுமோ அந்தளவு இஸ்லாமைப் பற்றித் தவறாகத் திரித்துக்கூறுவதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கும் இத்தகைய பெருச்சாளிகளின் சாயங்கள் பலமுறை வெளுத்திருந்தாலும் அவ்வப்போது புதிய நிறங்களைப் பூசிக் கொண்டு இவர்கள் உலா வருவதைத் தடுக்க இயலவில்லை என்பதுதான் யதார்த்தம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களுக்கும் விமர்சனங்களுக்குத் தக்க விளக்கங்கள் கொடுக்கப்படும்போது பதிலளிக்கத் திராணியின்றி அடுத்த விமர்சனத்திற்குத் தாவி விடும் சாமார்த்தியம் இவர்களுக்குக் கைவந்த கலையாகும்.
அப்படியே இந்தியாவிற்கு வந்தால் பிரபல தினசரிகளில் கட்டுரைகள் என்ற பெயரில் பொய்கள், அவதூறுகள், திரித்தல்கள், உளறல்களின் மூலம் தன் மனதினுள் உறைந்து விட்ட இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்தைக் கொட்டித்தீர்க்கும் அருண்ஷோரியிலிருந்து தென்னகத்தில் தங்கி விட்ட பார்ப்பன சோ வரை பட்டியல் மிக நீண்டு கொண்டு செல்லும்.
தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை முன்வைக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் சொந்தச் சரக்கில் எழுதுவதில்லை. பெரும்பாலான இவர்களது ஆக்கங்கள் மேற்கத்திய எழுத்தாளர்களின் படைப்புக்களின் மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேற்கத்திய உலகிற்குக் கடும் சவால் விடுவதாகவும் இஸ்லாம் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறும் இலக்கியத்தரத்தில் எழுதுவதில் வல்லவரான ராபர்ட் ஸ்பென்ஸர் கூட, போரையும் அமைதியையும் பற்றிப் பேசும் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களில் தம் வாதங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் தேர்வு செய்து திரிப்பதை வழக்கமாகக் கொண்டவர். குர்ஆனிலுள்ள வாசகங்களையும் (texual) வரலாற்றுப் பின்னணி(context) களையும் மாற்றிப்போட்டு விளையாடுவது இவருக்குக் கை வந்த கலை. அவதூறுகள் மற்றும் துன்புறுத்தல் மூலமாக வலிந்து போரைத் துவக்கும் எதிரிகளைச் சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லாமல் போகும் போது வேறு வழியின்றி எடுக்கப்படும் இறுதியான முடிவாக ஐயப்பாடுகளுக்கு இடமின்றி குர்ஆனில் கூறப்படும் போர் பற்றிய (9.1) வசனங்களை முஸ்லிம் அல்லாதவர்களைக் கண்டால் முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமை போன்று திரித்து சித்தரிப்பதும் இவர் கையாளும் யுக்தியாகும்.இந்த குரான் வசனங்களுக்கான விளக்கம் பெற

மதினா நகரத்தில் இஸ்லாம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினைத் தாங்க முடியாத மத நம்பிக்கையற்றவர்கள், முஸ்லிம்களுக்கெதிராகச் செய்த சதித்திட்டங்களையும் அவர்கள் கொடுத்த துன்பங்களையும் வஞ்சகத்தோடு செய்த துரோகங்களையும் அவர்கள் முஸ்லிம்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறித்த காரணத்தினாலும் துவங்கப்பட்ட அந்தப் போரைப்பற்றி குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமிய நிகழ்வுகள் பற்றிய சிறு அளவிற்கு அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள இயலும்.(9.13) போரிடச் சொல்வதற்கு முன்னும் பின்னுமுள்ள (2.190-193) வசனங்களை நயவஞ்சக எண்ணத்துடன் மறைக்கும் வித்தையை அருண் ஷோரியைப் பின்பற்றி தமிழக எழுத்தாளருக்கு கற்றுக்கொடுத்ததும் ராபர்ட் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்கள்தாம் எனலாம்.
பயங்கரவாதச் செயல்கள் எங்கு நடந்தாலும் அதில் இடம் பெற்ற குற்றவாளிகள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அல்லது சந்தேகத்தின் பெயரில் ஏதாவது முஸ்லிம் பெயர் கொண்டவர் அகப்பட்டு விட்டால் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பரப்புவதிலும், நடைபெறும் தீவிரவாதச் செயல்களை முஸ்லிம் அமைப்பு மற்றும் இயக்கங்களுடன் தொடர்பு படுத்தி இஸ்லாம் பற்றிய பயத்தினை அமெரிக்க மற்றும் பிரிட்டன் மக்களின் மனதில் விதைக்க பெரும் முயற்சிகள் நடைபெற்றன. முஸ்லிம் பெயர் கொண்டு ஒருவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் தலைப்புச் செய்தியாக்குவதும் பின்பு அவர் நிரபராதி என்று அறிய வரும்போது அதை வெட்கப்பட்டு ஐந்தாம் பக்கத்து கடைசி பத்தியில் சுருக்கி வெளியிடும் தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு முன்னோடிகள் மேற்கத்திய ஊடங்கள்தாம். இஸ்லாமிய அறிவைப் போதிக்கும் மதரஸாக்கள், பள்ளிவாசல்கள்தாம் முஸ்லிம்களின் சிந்தனாசக்தியைத் தூண்டுமிடம் என்பதை தாமதமாக அறிந்து எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் முடிச்சுப்போடும் வழக்கத்தை மக்கள் நம்பும் ஊடகங்களை வைத்து நீட்டி முழக்கி வெளிக்கொணர்ந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்  



ARTICLE BY ABU SALIHA [ SATHYAMARGAM ]

Friday, June 24, 2011

விந்தை நபியின் விண்வெளிப்பயணம்

                                                           விஞ்ஞானம் விழித்திடும்முன்

                                              
விந்தை நபியின் விண்வெளிப்பயணம்


                                              இறைமொழியும் நபிமொழியும்

தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்பு பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகவும் பரிசுத்தமானவன். (மஸ்ஐpதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்) நிச்சயமாக உமது இரட்சகனாகிய அவனே செவியேற்கிறவன் பார்க்கிறவன்.
(அல்குர்ஆன் 17:1)


நான் மக்காவில் (என்னுடைய வீட்டில்) இருக்கும் போது என்னுடைய வீட்டின் முகடு திறக்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதன்வழியாக இறங்கி என் நெஞ்சைப் பிளந்து ஜம்ஜம் தண்ணீரால் அதைக் கழுவினார்கள். ஈமானும் அறிவும் நிரம்பிய ஒரு தங்கப்பாத்திரத்தைக் கொண்டு வந்து (அதிலுள்ள ஈமானையும், அறிவையும்) என் உள்ளத்தில் வைத்து பின்பு மூடிவிட்டார்கள். (புகாரி)

                                         நீண்ட அறிவிப்பும், நிறைந்த நன்மைகளும்  

'புராக்' என்னிடத்தில் கொண்டு வரப்பட்டது. - அது நீளமான வெள்ளை நிறமுள்ளது. (அதன் உயரம்) கழுதையை விட உயரமானதும் கோவேறு கழுதையை விட சிறியதுமான ஒரு மிருகமாகும், அதனுடைய பார்வை படும் தூரத்திற்கு அது காலடி எடுத்து வைக்கும் - பைத்துல் முகத்தஸ் வரைக்கும் அதில் நான் ஏறிச்சென்றேன். நபிமார்கள் (ஏறிச்செல்லும்) வாகனங்களைக் கட்டும் கதவின் துவாரத்தில் அதைக் கட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். (தொழுது முடிந்ததும்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் மது உள்ள பாத்திரத்தையும் பாலுள்ள பாத்திரத்தையும் என்னிடம் கொண்டு வந்து (அவ்விரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுக்கும்படி கூறினார்கள். நான் பாலுள்ள பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தேன், இயற்கையை (இஸ்லாத்தையும் உறுதிப்பாட்டையும்) தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் (எனக்கு) கூறினார்கள்.

ஆதி பிதாவும் ஆரம்ப வானமும்

பின்பு என்னை வானத்தின் பக்கம் அழைத்துச்சென்று (முதல்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (தட்டுபவர்) யார்? எனக் கேட்கப்பட்டது. ஜிப்ரீல் எனக் கூறினார்கள். உங்களிடம் இருப்பவர் யார்? எனக் கேட்கப்பட்டது. முஹம்மது எனக்கூறினார்கள். அவருக்கு வானத்தின் பக்கம் ஏறி வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதா? என (அம்மலக்கு) கேட்டார். ஆம் அனுமதி வழங்கப்பட்டுவிட்டது என ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது எங்களுக்கு வானத்தின் கதவு திறக்கப்பட்டது. அங்தே ஆதம் (அலை) அவர்களை நான் பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி நல்லதை கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

இரண்டாம் வானமும் இறைத்தூதர் இருவரும்

பின்பு இரண்டாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (இரண்டாம்) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது இரண்டாவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே என் பெரியம்மாவின் (தாயின் சகோதரி) இரு மக்களாகிய மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களையும், ஸகரிய்யா (அலை) அவர்களின் மகன் யஹ்யா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு வாழ்த்துக் கூறி நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

மூன்றாம் வானமும் அழகு நபிச் சிகரமும்

பின்பு மூன்றாவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (மூன்றாம்;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது மூன்றாவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே யூசுஃப் (அலை) அவர்களை பார்த்தேன் அவருக்கு அழகின் அரைவாசி கொடுக்கப்பட்டிருந்தது. அவர் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

நான்காம் வானமும் இத்ரீஸ் (அலை)

பின்பு நான்காவது வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (நான்காம்;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது நான்காவது வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே இத்ரீஸ் (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஐந்தாம் வானமும் ஹாரூன் (அலை)

பின்பு ஐந்தாம் வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஐந்தாம்;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஐந்தாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே ஹாரூன் (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஆறாம்; வானமும் மூஸா (அலை)

பின்பு ஆறாம்; வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஆறாம்;;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஆறாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே மூஸா (அலை) அவர்களை பார்த்தேன். அவர்கள் எனக்கு வாழ்த்துக் கூறி, நல்லதைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்கள்.

ஏழாம்; வானமும் இப்ராஹீம்(அலை)

பின்பு ஏழாம்; வானத்தின் பக்கம் என்னை அழைத்துச் சென்று (ஏழாம்;;;) வானத்தின் கதவைத் தட்டினார்கள். (முதல் வானத்தில் நிகழ்ந்தது போன்றே கேள்விகளும் பதில்களுமாய் உரையாடல் முடிந்தது). அப்போது ஏழாம் வானத்தின் கதவு திறக்கப்பட்டது, அங்கே இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் முதுகை பைத்துல் மஃமூரின் பக்கம் சாய்த்தவர்களாக வைத்திருப்பதை நான் பார்த்தேன். அதில் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குகள் நுழைகின்றார்கள் அவர்கள் மீண்டும அங்கே வருவதில்லை.


சித்ரத்துல் முன்தஹா

பின்பு சித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்க்கு என்னைக் கொண்டு சென்றார்கள், அந்த (மரத்தின்) இலைகள் யானையின் காதுகளைப் போன்றும் அதனுடைய பழங்கள் பெரும் குடமுட்டிகளைப் போன்றும் இருந்தது. அல்லாஹ்வின் அருள் அதனைச் சூழ்ந்திருந்த காரணத்தினால் அதன் நிறமே மாறியிருந்தது. அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் அதன் அழகை வர்ணிக்கமுடியாது.

இறைச்தூதுச் செய்தியும் கண்குளிர்ச்சித் தொழுகையும்.

அல்லாஹ் எனக்கு வஹி அறிவிக்க நாடியதையெல்லாம் வஹீ அறிவித்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்.


ஐம்பதிலிருந்து ஐந்து வரை

(அதன்பிறகு) மூஸா (அலை) அவர்கள் இருக்கும் (வானம்) வரை நான் இறங்கி வந்தேன். உமது உம்மத்துக்கு உமது இறைவன் எதனைக் கடமையாக்கினான்? என் மூஸா (அலை) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். ஐம்பது நேரத்தொழுகையை என நான் கூறினேன். இதை உமது உம்மத்தவர்கள் சுமக்கமாட்டார்கள். நானும் எனது உம்மத்தவர்களைச் சோதித்துவிட்டேன். ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச் சென்று இதனைக் குறைத்து வாருங்கள் எனக் கூறினார்கள். நான் என் இரட்சகனிடம் திரும்பிச் சென்று என் இரட்சகனே! தொழுகையின் எண்ணிக்கையை என் உம்மத்துக்குக் குறைத்து விடுவாயாக என நான் கேட்டேன். ஐந்து நேரத் தொழுகையாக அல்லாஹ் குறைத்தான். மூஸா (அலை) அவர்களிடம் நான் மீண்டும் வந்து ஐந்து நேரத்தொழுகையை அல்லாஹ் குறைத்து விட்டான் எனக் கூறினேன். இதையும் உமது உம்மத்தவர்கள் சுமக்க மாட்டார்கள் ஆகவே உமது இரட்சகனிடம் திரும்பிச் சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். முஹம்மதே! ஒரு நாளைக்கு ஐந்து நேரத் தொழுகைகள் தொழவேண்டும், ஒரு நேரத்தொழுகைக்கு பத்து நேரத் தொழுகை தொழுத நன்மைகள் கிடைக்கும். ஐந்து தொழுகைக்கும் ஐம்பது தொழுகையின் நன்மை கிடைக்கும் என அல்லாஹ் (எனக்கு) சொல்லும் வரை உயர்ந்தவனாகிய எனது இரட்சகனுக்கும் மூஸா (அலை) அவர்களுக்கும் மத்தியில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். யார் ஒரு நன்மையான காரியத்தை செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவருக்கு ஒரு நன்மையும், யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு பத்து நன்மைகளும் கிடைக்கும், யார் ஒரு பாவம் செய்ய நினைத்து அதை செய்யவில்லையென்றால் அவர் குற்றம் செய்ததாக எழுதப்படமாட்டாது, யார் அதைச் செய்கின்றாரோ அவருக்கு ஒரு குற்றம் மாத்திரமே எழுதப்படும். மூஸா (அலை) அவர்கள் (இருக்கும் வானம்) வரை நான் இறங்கி வந்து நடந்ததைக் கூறினேன். உமது இரட்சகனிடம் திரும்பிச் சென்று இதையும் குறைத்து வாருங்கள் எனக்கூறினார்கள். என் இரட்சகனிடம் மீண்டும திரும்பிச் செல்வதற்கு நான் ;வெட்கப்படுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)

நபியவர்கள் விண் வெளிக்கு சென்றது நபித்துவத்திற்க்கு ஒரு பெரும் அத்தாட்சி


விண்ணை முட்டிடும் விஞ்ஞான முன்னேற்றங்களை இன்றைய அறிவியல் எட்டினாலும் வானத்தை எட்டிப்பார்க்க முடிந்ததே தவிர தொட்டுப்பார்க்க முடியவில்லை. ஆனால் விஞ்ஞானத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாத காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இரவின் ஒரு சிறு பகுதியில் ஏழு வானங்களையும் கடந்து சென்று வந்தது அவர்கள் இறைத்தூதர் என்பதற்க்கு மிகப்பெரும் அத்தாட்சியாகும்

ஆதாரமற்ற செய்திகளும் சேதாரமற்ற சன்மார்க்கமும்

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இதுவரைக்கும் இஸ்ரா-மிஹ்ராஜ் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீது கூறும் செய்திகளைப் படித்தீர்கள். இஸ்ரா என்பது இரவில் பிரயாணம் செய்தல் என்பதாகும். அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்துசுக்கு புராக்கில் சென்ற பிரயாணத்திற்க்கு சொல்லப்படும் மிஃராஐ; என்பது எழு வானங்களை கடந்து சென்றதற்கு சொல்லப்படும். இஸ்ரா என்பது குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றது, மிஃராஜ் என்பது ஹதீதில் கூறப்பட்டிருக்கிறது. இவ்விரண்டும் குர்ஆன் ஹதீதின் மூலம் கூறப்பட்ட செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அது எந்த மாதம் எத்தனையாம் தேதி நிகழ்ந்தது என்பது பற்றி குர்ஆனிலோ ஹதீதிலோ கூறப்படவில்லை. அது எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி அறிஞர்கள் பல கருத்துக் கணிப்புகளைக் கூறுகின்றார்கள். அவைகள் பின்வருமாறு.

1. நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடம் (இதை தப்ரி இமாம் கூறுகின்றார்கள்.
2. நபித்துவம் கிடைத்து ஐந்து வருடத்திற்க்கு பின் (இதை நவவி, தப்ரி இமாம்கள் கூறுகின்றார்கள்).
3. நபித்துவம் கிடைத்து பத்து ஆண்டுகளுக்குப் பின் ரஜப் மாதம் பிறை 27ல் (இதை அல்லாமா மன்சூர் பூரி அவர்கள் கூறுகின்றார்கள்).
4. நபித்துவம் கிடைத்து 12ம் ஆண்டு ரமழான் மாதத்தில் (ஹிஜ்ரத் செல்வதற்க்கு 16 மாதங்களுக்கு முன்).
5. நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் (ஹிஜ்ரத் செல்வதற்க்கு 14 மாதங்களுக்கு முன்).
6. நபித்துவம் கிடைத்து 13ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் (ஹிஜ்ரத் செல்வதற்க்கு ஒரு ஆண்டுக்கு முன்).

இஸ்ரா, மிஹ்ராஜ் என்பது எப்போது நடந்தது என்பது பற்றி அறிஞர்கள் தற்போது கூறிய கருத்துக்கள் ஒரு கணிப்பே தவிர எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் சொல்லப்பட்டதல்ல. இஸ்ரா, மிஹ்ராஜ் நடந்த நாள் எப்போது என்று நாம் அறிந்திருந்தாலும் கூட அந்த நாளை சிறப்புக்குரிய நாளாக அல்லது சிறப்புக்குரிய மாதமாக கருதுவதாக இருந்தால் அது அல்லாஹ்வின் மூலமாக அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும், நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்ததர்க்கு பிறகு குறைந்தது பத்து ஆண்டாவது உயிருடன் வாழ்ந்திருக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவையாவது மிஃராஜூக்கு விழா நடத்தியதாக அல்லது அந்த நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதியதாக நாம் பார்க்கவே முடியாது. நபி (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்று எப்படி நம்மிடம் மார்க்கமாக முடியும்? இன்று முஸ்லிம்களில் பலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் இரவாக எண்ணி அந்த இரவில் அமல்கள் செய்தால் மற்ற நாட்களில் கிடைக்கும் நன்மைகளை விட அதிக நன்மைகள் கிடைக்கும் என நினைத்து தொழுகை, குர்ஆன் ஓதுவது, உம்ரா, நோன்பு, தர்மம் போன்ற அமல்களை அதிகம் செய்கின்றார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட உணவுகளை சமைத்து தர்மமும் செய்கின்றார்கள். இப்படிச்செய்வது இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கிய பித்அத் என்னும் பெரும்பாவமாகும்.


யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)

இன்னும் ஒரு அறிவிப்பில்:-
யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றைச் செய்கின்றாரோ அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்)


நமது ஒவ்வொரு வணக்கமும் ஏற்றுக்கொள்ளப்படுவதள்கு இரண்டு நிபந்தனைகள் அவசியம்.

1. அல்லாஹ்வுக்காக அந்த வணக்கம் செய்யப்படவேண்டும்.
2. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி செய்யப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகளின்படி ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜின் இரவாக கொண்டாடுவது தவறானதாகும். காரணம் அது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒரு வணக்கம் அல்ல. ஆகவே! ரஜப் மாதத்தின் 27ம் நாளை சிறப்புக்குரிய நாளாகக் கருதாமல் மற்ற சாதாரண நாட்களைப்போன்றே கருத வேண்டும்.

படிப்பினை தரும் தொழுகை

மிஃராஜ் மூலமாக தொழுகை மிக முக்கியமான வணக்கம் என்பதை நாம் தெரிந்து அதை சரிவர நிறைவேற்ற வேண்டும். அதாவது அல்லாஹ் எல்லா வணக்கங்களையும் நபி (ஸல்) அவர்கள் பூமியில் இருக்கும்போது வஹீ மூலமாக கடமையாக்கினான். ஆனால் தொழுகையை ஏழு வானங்களுக்கும் மேல் தன் நபியை அழைத்து அங்கே ஐம்பது நேரத் தொழுகையாக கடமையாக்கி பின்பு அதை ஐந்தாக குறைத்து இந்த ஐந்திற்க்கும் ஐம்பது நேரத் தொழுகையின் நன்மைகளை வாரி வழங்கி நம்மீது கருணை காட்டியிருக்கின்றான். இந்த ஐந்து நேரத் தொழுகைகளைச் சரிவர நிறைவேற்றும் மக்கள் மிகவும் குறைவானவர்களே. ஆகவே ஐங்காலத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி பித்அத்துக்கள், தடுக்கப்பட்டவைகள் போன்ற எல்லாத் தவறுகளையும் தவிர்ந்து நடந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் முற்றாகக் கட்டுப்பட்டு ஈருலக வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.
 
  
ஆக்கம் : இப்னு சாஹிபா [ஒற்றுமைTEAM]

 

 

Thursday, June 23, 2011

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 4)

யூத பாரம்பரியத்தினால் உரமிடப்பட்டு, உலக மக்கள் மனதில் பசுமையாக வளர்த்து விடப்பட்ட இஸ்லாத்தின் மீதா இத்தகைய அதீத அச்சத்தை, இன்று அறிவிக்கப்படாத போக்கிரியாக, உலக நாடுகளின் பெரியண்ணனாக எண்ணி வலம் வரும் அமெரிக்க நிர்வாகம் மிகவும் நேர்த்தியுடன் கட்டுக் குலையாமல் கட்டியெழுப்பி சர்வதேச அளவில் மக்கள் மனங்களில் மிக உறுதி வாய்ந்த கட்டிடம் போன்று உயர்ந்து நிற்க வைத்திருக்கின்றது. மதப்பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் யூதர்களும் அமெரிக்கர்களும் எலியும் பூனையும் என்றாலும், இஸ்லாத்தினை எதிர்க்கும் விஷயத்தில் இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

நவீன உலகின் சட்டாம்பிள்ளையாக நிரந்தரமாக வலம் வரவேண்டும் என்ற அதிகார வெறி, தன்னை எதிர்ப்பவர்களையும் எதிர்காலத்தில் தனக்கு மிகப்பெரிய சவாலாக வர நேரிடலாம் என கணிக்கப்படுபவர்களையும் நிர்மூலமாக்குவதில் அதீத சிரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வைக்கின்றது. அமெரிக்க நிர்வாகத்தின் இந்த அதிகார வெறியே, பாரம்பரியமாக அவர்களின் நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் நேர் எதிர் கொள்கையுடைய யூதர்களோடு தற்காலிகமாய் தோளில் கையை போட்டுக்கொண்டு அவர்களின் திட்டங்களை முன்னெடுத்து செல்ல வைக்கின்றது.

ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால் அமெரிக்க நிர்வாகம், யூதர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டது என்பதை எவரும் உணரலாம். உலகின் அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அரும்பாடுபட்டுச் சித்தரித்துக் கொண்டிருக்கும் இவ்விரு சக்திகளும் ஒரே உறையில் இருக்க முயலும் இரு கத்திகள் என்பதை உலகம் கண்ட கொண்டு வருகிறது. ஒருவருக்கு இஸ்லாத்தை அழிப்பது தான் நோக்கம் எனில், மற்றவருக்கு உலக அதிகாரத்தை கையில் வைத்திருப்பது மட்டுமே பிரதான நோக்கமாகும். உலக அதிகாரத்தை கையில் வைக்கக் காயை நகர்த்தும் அமெரிக்கா, தன் குறிக்கோளை எட்ட மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை, யூதர்களை உள்ளும் புறமும் நன்றாக ஊட்டி வளர்த்து வைத்திருக்கின்றது.

ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே இவை செயல்படுத்தி வருகின்றன.
இதற்கு உதாரணமாக மத்தியகிழக்கில் அமெரிக்கா நடத்தும் நாடகத்தை கூறலாம். உலகில் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாக உருவகப்படுத்தும் அதேவேளையில், மத்திய கிழக்கை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும்படியாக, ஒரு பக்கம் இஸ்ரேல் எனும் அபகரித்து உருவாக்கப்பட்ட யூத நாட்டிற்கு நவீன ஆயுதங்களை வாரி வழங்கி விட்டு, பலகீனமான இராக்கை உயிர்க் கொல்லி பயங்கர ஆயுதங்களைக் கையில் வைத்திருப்பதாக கூறி கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.

இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

ஒரு காலத்தில் தன்னால் இரானுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டு அமெரிக்காவுக்கு கட்டுப்பட மறுத்த சதாம், அதிரடியாக தனது எண்ணெய்க் கையிருப்பை யூரோவுக்கு மாற்ற முனைந்ததும், மத்திய கிழக்கில் ஓர் இஸ்லாமிய கூட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து அரபு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து அதனை முதன் முதலில் அப்போதைய யூதர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் ஃபலஸ்தீனின் அதிபராக(!) இருந்த யாசர் அரஃபாத் வரவேற்றது தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படியே விட்டால் நாளை அமெரிக்காவிற்கு மிகப்பெரும் சவாலாக அரபு நாடுகள் ஒன்றிணைந்து களமமைத்து விடுமோ என்ற அச்சத்திலேயே, அமைதிக்காக உருவாக்கப்பட்டு இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக்கொண்டுவரும் ஐநா சபை உள்பட உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து கடுமையாக எதிர்த்தபோதும், புஷ் இராக்கை நிர்மூலமாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றார்.

ஒரு பக்கம் தானே நேரடியாக முஸ்லிம் நாடுகளை ஒவ்வொன்றாகக் குறி வைத்து தகர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளை, மத்திய கிழக்கின் அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் ஃபலஸ்தீன் ஆக்ரமிப்புப்பூமியான இஸ்ரேலுக்கு அதன் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை விட பலமடங்கு அதிகமான அளவில் நவீன ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. புருவத்தைத் தூக்கும் உலக சோம்பேறி நடுநிலைவாத நாடுகளை திருப்திப்படுத்த, (இஸ்ரேலிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள) அரபு நாடுகளுக்கும் ஒரு பெயருக்காக வீசி எறிகிறது. சமீபத்தில் அரபு மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கிய ஆயுதங்களின் கணக்கீடு (நன்றி: கல்ஃப் டைம்ஸ் 29/07/2007 பதிப்பு) இதனைத் துல்லியமாக தெரிவிக்கின்றது. இஸ்ரேலுக்கு 30 பில்லியனுக்கும் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் சேர்த்து 20 பில்லியனுக்குமான அடுத்த பத்து வருடங்களுக்கான ஆயுத, ராணுவ வினியோகத்திற்கான ஒப்பந்தப் பட்டியல் இங்கே:

 சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுத விற்பனை மூலம் கொள்ளை இலாபம் ஒரு பக்கம், எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக எந்த ஒரு நாடும் முளை விட்டுக் கிளம்பி விடாமலிருக்க, அவர்களின் சிந்தனை தன் பக்கம் திரும்பா வண்ணம் உள்நாட்டுப் போரைத் தூண்டும் குழப்பங்களைத் தொடர்ந்து விளைவிப்பது என்று கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியாக ஒருவர் மாற்றி ஒருவர், தங்களின் இலட்சியக் கனவை பிறர் உணர நேர இடைவெளி கொடுக்காமலேயே திறமையாகச் செயலாற்றி வருகின்றனர்.

அதிகாரத்தை அடித்துப்பிடித்து நிலை நிறுத்திக்கொள்ள இவ்விரு கூட்டமும் இன்று எடுத்துக்கொள்ளும் இவ்விதமான ஒவ்வொரு முயற்சியும் இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. அதிகாரத்தில் தற்போது இருக்கும் முன்னோடிகள் தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு தாம் செயல்படும் முறைகளைக் குறித்து ஓர் அறிவிக்கப்படாத செயல்முறை வகுப்பையே நடத்துகின்றனர் எனலாம். இஸ்லாமோஃபோபியாவின் அடிப்படையில் அமைந்த இச்செயல்பாடுகள் அதிகாரத்திற்காக அடுத்தடுத்து பதவிக்காக போட்டியிட முன்வருபவர்களுக்கு நல்ல(?) ஓர் முன்மாதிரியாகவும், ஊடாக போஷாக்குடன் வளர்த்து வந்த இஸ்லாமோஃபோபியாவையும் சேர்த்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் உதவுகிறது.
 
ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், (இத்தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் குறிப்பிட்டது போன்று) முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே இவை செயல்படுத்தி வருகின்றன.

ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களை பிளவுபடுத்த யூதர்கள் கையாண்ட குயுக்தியாக, நபி(ஸல்) அவர்களின் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கை வரலாற்றில் நபியவர்கள் செய்யாத, செயல்படுத்த, கூறாத விஷயங்களை அவ்வாறு நடந்ததாகவும், இடைச்செருகலிட்டு இட்டுக்கட்டினார்கள் எனில், தற்காலத்தில் அமெரிக்கா கையாளும் முறை வித்தியாசமான, அதிபயங்கரமான முறையாகும்.

சுதந்திரத்தை விரும்பும் நம்மையும், நம் நாட்டையும் அழிக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளால் திட்டமிடப்படுகின்றது" - அமெரிக்காவில் எந்தவொரு மூலையில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் மைக்கை பிடித்து former president
ஜார்ஜ் புஷ் முழங்கும் வழமையான இந்த வீர வசனத்தின் பின்னணி என்ன என்பது தற்போது விளங்கியிருக்கும்.

2007 இல் பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் அநியாயமான முறையில் சிவப்பு மசூதி மீது நடத்திய தாக்குதலின் இறுதியில் “இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அதிபர் முஷாரப்பின் செயல்பாடு பாராட்டத்தக்கது. முஷாரப் என் உற்ற தோழன்” என உச்சி முகர்ந்திருந்த புஷ், இன்று ஒபாமா பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க நேரும் என அந்தர் பல்டி அடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. சிவப்பு மசூதி இமாம் தனது இறுதி தருணத்தில் கூறிச் சென்றது போன்று, இன்று பாகிஸ்தான் பொதுமக்களாலேயே அங்கு ஓர் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் வந்ததாலேயே ஒபாமா அந்தர்பல்டி அடிக்கத்துவங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

விபச்சாரம், போதைப்பொருட்கள் மூலம் இளைய சமுதாயத்தை சீரழிக்க முனைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்ததை, மேற்கத்திய சீரழிந்த நாகரீகத்தில் அதிநாட்டம் கொண்ட முஷரப் கண்டுகொள்ளாத காரணத்தாலேயே சிவப்பு மசூதியின் மாணவ-மாணவிகள், தாமாகத் தெருவில் இறங்கி பியூட்டி பார்லர்கள் என்ற பெயரில் நடந்த விபச்சார விடுதிகளை திடீர்சோதனை நடத்தி சில விபச்சார பெண்களை சிறைபடுத்தினர் என்பது அனைவரும் அறிந்த காரியமாகும்.

இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள் எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்?... என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது.
இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம்" என்று ஒருபுறம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கும்ஒபாமா நிர்வாகம், மறுபக்கம் “இஸ்லாமியத் தீவிரவாதிகள்” என்று எதிர்மறையாகப் பேசுவதை கவனிக்கும் எவருமே, “இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள் எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்? அவ்வாறு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அமைதியான இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வருவார்களா? அல்லது அமைதியை போதிக்கும் இஸ்லாத்தை தெளிவாக கற்றுக் கொண்ட எவராவது பொது அமைதிக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களா?” என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது. இது தான் ஒபாமா தந்திரத்திற்கும், அதீத முயற்சியுடனான திரும்பத் திரும்ப புழக்கத்தில் அவ்வார்த்தைகளை விட எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஒருபக்கம் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து என ஒபாமா நிர்வாகம் முழங்கும் அதேநேரம் மறுபுறம் மறைக்கப்படும் உண்மைகளையும், பிரபல செய்தி ஊடகங்களுக்குப் பொய்களை மெய் போல் சித்தரித்துத் தயாரித்து அளிக்கும் நயவஞ்சத்தினையும் செவ்வனே செய்தது. நீண்ட காலத் திட்டத்தின்கீழ் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சாதுரியமான திட்டமிடுதல் நல்ல பலனையும் தந்தது. அடிப்படை கொள்கைகளை பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என்ற பார்வையுடனேயே பொதுமக்கள் பார்க்கும் விதத்தில், மக்களின் சிந்தனையை மூளைச்சலவை செய்யும் இக் குறிக்கோள் வெற்றி பெற்றது. எதிர்மறையாய் நிகழும் அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பது இஸ்லாமும் அதன் கோட்பாடுகளுமே என்ற துர்சிந்தனை தொடர்ச்சியாக மக்கள் மனங்களில் பயிர் செய்யப்பட்டது. இதன் மூலம் முஸ்லிம்களின் பின்னணி, அவர்களின் உடமைகள் ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஐய முத்திரை குத்தப்பட்டது. மேல் மட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை ஒவ்வொருவரும் கேள்விக்குட்படுத்தப்பட்டனர். ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் ஒவ்வொரு அசைவும் ஆவணமாக்கப்பட்டது.

"தேசியவாதத்தை முன்வைத்த எந்த ஒரு சித்தாந்தத்தையும் தரையில் வீழ்த்தி தவிடு பொடியாக்கும் மிகத்தெளிவான மற்றும் வலிமை வாய்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்கள் பின்பற்றுவதால் அவர்களிடம் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்" - மீடியா உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் ரூபர்ட் மர்டோ ஆஸ்திரேலியாவின் ஸிட்னியில் ஜூன் 26, 2006 ல் நடந்த ஒரு கூட்டத்தில் உதிர்த்த சொற்கள் இவை.

 அமெரிக்க, பிரிட்டனின் ஊடகங்கள் எத்தகைய செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும், எவற்றை மறைத்து ஓரங்கட்ட வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய ஒரு பெருந்தலையின் அடிமனதில் இருக்கும் இத்தகைய துவேஷ எண்ண ஓட்டத்தை வைத்து அதன் பிரதிபலிப்பு ஊடகங்களில் எவ்வகையில் வெளிப்படுத்தப்பட்டு அவை சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்து இஸ்லாம் போதிக்கும் அமைதியையும் பரஸ்பர அன்பையும் எடுத்தியம்பும் விதமாக பிரிட்டனில் இலட்சக்கணக்கானோர் நடத்திய பேரணியையும் அவர்கள் கையில் பிடித்துச் சென்ற பேனர்களையும் படம் பிடித்து பிரசுரிப்பதை ஏனோ தவிர்த்துக் கொண்ட ஊடகங்கள், கூட்டத்தினூடே ஒருவர் குறும்பு செய்யும் எண்ணத்தில் கையில் கொண்டு வந்த பேனர் ஒன்றை மட்டும் முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து தங்கள் குறிக்கோளை நன்றாக நிறைவேற்றின.

  என்னதான் தலைகீழாக நின்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குறை சொல்ல முற்படுவதன் மூலம், தாம் எண்ணியதைச் செயல்படுத்தி விடமுடியாது என்பதை மிகத் தாமதமாக புரிந்து கொண்டு, இஸ்லாமிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கியமானவை, இஸ்லாத்தின் கோட்பாடுகளை இசைந்து, முறையாகப் பின்பற்றுவோரை சமூகப் பிணைப்பில் இருந்து வேறுபடுத்துவதாகும். அதற்கு ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் தீவிரவாதிகள் எனும் அடைமொழி.

இஸ்லாமியர்களிடமிருந்து மேற்கத்திய உலகைப் பிரித்தாளும் சூழ்ச்சியாக அடிப்படைவாத வலதுசாரி யூதகுருமார்கள் பயன்படுத்திய இவ்வார்த்தையை அமெரிக்காவோடு சேர்ந்து பிரிட்டனும் முன்னோர்கள் காட்டித் தந்த வழியிலேயே கன கச்சிதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

மேற்கத்திய ஊடகங்கள், அமெரிக்காவையும் பிரிட்டனையும் அச்சுறுத்தும் பயங்கரவாதச் செயல்களின் அதிகரிப்பை, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் பழி சுமத்துவதற்கான ஒரு நேர்த்தியான போர்க்கலைத் தந்திரமாகவே கையாண்டு வருகின்றன. இஸ்லாம் பற்றிய அடிப்படைகளை உணராத சாதாரண மக்களின் அறியாமையை முதலீடாக வைத்தோ அல்லது முஸ்லிம்களின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதன் மூலமோ இதை எளிதில் சாதிக்க திட்டமிட்டன. குழுக்களாகவும் அமைப்புகளாவும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டு இஸ்லாமிய சமூகத்தை முழு அளவில் பாதிப்படைய வைக்கும் விதத்திலான தாக்குதல்களைத் தொடுத்தன. இவை அனைத்திற்கும் அடிப்படை மூலகாரணமாக அமைந்தது இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் அன்றி வேறில்லை.

அறியாமையினாலோ சார்பு மனப்பான்மையினாலோ மேற்குலகில் அவ்வப்போது எழும் கூக்குரல்கள் முக்கியமாக, செயல்முறைக் கொள்கைகளை வகுக்கும் சமூகம், இஸ்லாத்தின் மீது பழியைச் சுமத்த உறுதியுடன் முடிவு செய்தது. மெல்லும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்?

இஸ்லாத்தின் மீதான துவேஷத்திற்கானத் தீனியாகக் கடந்த 9/11 பயங்கர நிகழ்வுகளின் மூலம் எழுந்த அச்சம் கலந்த ஐயப்பாடுகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான இயங்குவிசையை மீண்டும் தூண்டிவிட்டது. War on Islam என்பதைச் சூசகமாக War on Terrorism என்ற வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாத்தைத் தனிமைப்படுத்த முயற்சிகள் செய்தன. இன்று வரை உலக அரங்கில் நிரூபிக்கப்படாத 9/11 குற்றத்தைப் புரிந்தவராக கருதப்படும் (Prime Suspect) ஒஸாமா பின் லேடன் "இஸ்லாமியத் தீவிரவாதி" என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார். எவரும் அமைதி மார்க்கமான இஸ்லாத்துடன் தீவிரவாதம் எவ்வாறு சேரும் என்ற கேள்வி எழுப்பும் மனநிலையிலேயே இல்லை. மேற்கத்திய ஊடகங்களோ உணர்ச்சிவசப்பட்டு ஒருபடி மேலே போய் "அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தைத் தகர்த்த ஒஸாமா" என்று கோயபல்ஸ்தனத்தையும் திறமையாகக் கையாண்டு வருகின்றன. 

அதன்படி, இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் இவர்களால் வகுக்கப்பட்டன.

அந்தத் திட்டங்கள் என்ன?


இன்ஷா அல்லாஹ் தொடரும்  

 ARTICLE BY ABU SALIHA [SATHYAMARGAM ]  

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை! (பகுதி 3)

சுமார் 800 ஆண்டுகாலம் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த அந்தலூசியா என்றறியப்பட்ட ஸ்பெயினில், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில், ஒரு சதவீத முஸ்லிம்கள் கூட மீதம் இல்லாதவாறு நாடு முழுவதும் சல்லடை போட்டு முழுவதுமாக முஸ்லிம்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர். ஆனால் இன்றோ, மீண்டும் அங்கு இஸ்லாம் துளிர் விட்டு புத்துணர்வுடன் எழுச்சி பெற ஆரம்பித்து விட்டது. இது தான் இஸ்லாத்தின் சிறப்பியல்பாகும்.

இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் இஸ்லாம் மீண்டும் கட்டமைக்கப்பட்ட காலத்தில் முதல் இஸ்லாமிய அரசாங்கம் மதீனாவில் அமைக்கப்பட்டது. சுமார் 13 வருடங்கள் மக்கா நகரில் இஸ்லாமிய பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், இறுதியில் மக்காவிலிருந்து அம்மக்களால் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவர்கள் குடியேறிய மதீனா நகரில், அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவும் வகையில், மதீனா நகர மக்கள் தங்களின் முழு ஆதரவை முஹம்மது(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், முன்பு மக்கா நகரில் வாழ்ந்த மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் குறிப்பிட்ட எந்த மதத்தையும் சாராமல் கடவுள் எனத் தாம் கருதிய அனைத்தையும் ஏற்று வணங்கிக் கொண்டிருந்தவர்களாவர். இவர்களிடையே 13 வருடங்கள் நபி(ஸல்) அவர்கள் நேரடியாக பிரச்சாரம் செய்த பொழுதும் கிடைக்காத வரவேற்பு, பெரும்பாலான மக்கள் முஹம்மது(ஸல்) அவர்களை நேரடியாகப் பார்த்திராத மதீனா நகரத்தில் அவர்களுக்குக் கிடைத்தது. இத்தனைக்கும் மதீனாவில் வாழ்ந்த மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் பல்வேறு கோத்திரங்களில் இருந்த மாறுபட்ட நம்பிக்கைகள் கொண்ட மக்களே ஆவர். இவர்களிடையே யூத, கிறிஸ்தவர்களும் பெருவாரியாக வாழ்ந்து வந்தனர்.

மிகக் குறுகிய காலத்திலேயே மதீனா நகர மக்கள் இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றதுடன், அந்த மார்க்கத்தைத் தமக்கு அறிமுகப்படுத்திய முஹம்மது(ஸல்) அவர்களையும், அவர்களின் கொள்கைகளையும் மனதார ஏற்றுக் கொண்டனர். அதாவது யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களில் நம்பிக்கை வைத்திருந்த அம்மக்களே திருக்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களையும் ஏற்று முஸ்லிம்களானவர்கள் ஆவர். அதற்குப் பின் வந்த 10 வருடங்களில் மக்கா நகர் உட்பட ஏனைய அரபு நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய அரவணைப்பின் கீழ் வரும் வகையில் அந்தந்த நாட்டு மக்கள் மிக எளிதில் மனதார இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

நபி(ஸல்) அவர்களின் இறுதிகாலம் வரை, தங்களிடமிருந்து கைவிட்டுப் போன மத மற்றும் அதிகார தலைமைப் பீடங்களை திரும்பவும் மீட்க முடியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்த யூத குருமார்களும், ரப்பிகளும் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் பல்வேறு வழிகளில் மீண்டும் தங்களிடமிருந்து விட்டுப்போன அதிகாரங்களை மீட்டெடுக்க மிகுந்த சிரத்தைகளை மேற்கொண்டனர். எனினும் மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலம் வரை அதனை அவர்களால் சாதிக்க இயலாமல் இருந்தது.

தங்களிடமிருந்து கைவிட்டுப் போன அதிகாரங்களை மீட்டெடுக்க யூதர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளின், அடிச்சுவடுகளின் மறுவடிவமே இன்றைய இஸ்லாமோஃபோபியாவாகும்.
இஸ்லாமோஃபோபியாவின் ஊற்றுக்கண் இங்கே தான் ஆரம்பம் ஆகின்றது. அதாவது இஸ்லாமிய எழுச்சியின் ஆரம்பகாலம் வரை மத மற்றும் ஆட்சி அதிகாரத் தலைமைப் பீடங்களை தங்கள் விருப்பத்திற்கு வளைத்து போட்டு அராஜகங்களிலும், அக்கிரமங்களிலும் தான்தோன்றித்தனமாக திளைத்துக் கொண்டிருந்த யூத குருமார்களும் ரப்பிகளும் தான் இஸ்லாமோஃபோபியாவின் அன்றைய பிறப்பிடங்களாவர். தங்களிடமிருந்து கைவிட்டுப் போன அதிகாரங்களை மீட்டெடுக்க அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளின், அடிச்சுவடுகளின் மறுவடிவமே இன்றைய இஸ்லாமோஃபோபியாவாகும்.

இஸ்லாத்தை வீழ்த்தினாலே தாங்கள் இழந்த தங்களின் அதிகாரங்கள் திரும்பக் கிடைக்கும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட யூதர்கள்,(இந்தியாவின் தற்காலச் சூழலுக்கு இது மெத்தப் பொருந்தும். ஆரம்பகால மனு அடிப்படையிலான பிராமணீயத்தின் ஆட்சியை தகர்த்த இஸ்லாத்தின் வருகையும் அதனை மீட்டெடுக்க இன்று நடக்கும் கடும் முயற்சிகளும் அப்படியே பொருத்திப் பார்க்கத்தக்கனவையே. இஸ்லாத்தின் வருகையால் தங்களின் ஆதிக்கம் நிச்சயம் ஆட்டம் கண்டுவிடும் என்பதை அக்கால மதீனாவின் யூதர்களின் நிலையிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட ஆதிக்க சக்திகளே எல்லா உருவிலும் இஸ்லாத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.) ஆரம்ப காலத்தில் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க இஸ்லாமிய ஆட்சியின் அதிகார வரம்பிற்குள் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருந்து கொண்டே சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாமிய அரசின் எதிரி நாடுகள் மற்றும் குழுக்களுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு நயவஞ்சகமாக நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் அரசியல் ரீதியிலான முயற்சிகள் அனைத்தும் இஸ்லாம் வார்த்தெடுத்த இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நிர்மூலமாக்கப்பட்டதோடு, வீரியத்துடன் அண்டைநாடுகளுக்கும் இஸ்லாம் எடுத்துச் செல்லப்பட்டது.

உடல்பலத்தின் மூலம் இஸ்லாத்தை தகர்ப்பது இயலாத காரியம் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட யூதர்களுக்கு, அவர்களின் தந்திரமான மதியூகத்திற்குப் பிரதிபலன் மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் கிடைத்தது. நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழரும் அவர்களின் மருமகனுமான உஸ்மான்(ரலி) அவர்களைக் கொலை செய்ததன் மூலம், இஸ்லாத்தைத் தகர்க்கும் காரியத்திற்கு யூதர்கள் துவக்கம் குறிக்க ஆரம்பித்தனர்.

 இதன் பின்னர் அவர்களின் செயல் திட்டம் அனைத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளிலும், சட்டதிட்டங்களிலும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களிலும் இடைச்செருகல்களைப் புகுத்துவதிலும், இஸ்லாமியர்களிடையே பிரிவுகளையும், பகைமைகளையும் உருவாக்குவதிலும் திரும்பியது. இதற்காக அவர்கள் தங்களை முஸ்லிம்களாக அறிவித்துக் கொண்டு இஸ்லாத்தை மிகத்தெளிவாக படிப்பதில் தங்களின் ஆரம்பகாலத்தை செலவழித்தனர். நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே, தன்னை முஸ்லிமாக காட்டிக் கொண்டு, முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிட வலம் வந்த அப்துல்லாஹ் பின் உபை என்பவரின் செயல்பாடுகள் இவற்றிற்கு சாட்சியம் பகரும். அப்துல்லாஹ் பின் உபையின் வழித்தோன்றல்கள், இன்றைய காலகட்டத்தின் சல்மான் ருஷ்டி வரை இஸ்லாத்தினுள் முஸ்லிம் போர்வையில் இருந்து கொண்டு இஸ்லாத்தைத் தகர்க்க முயலும் வேலையைச் செவ்வனே உலக இலாபத்திற்காக செய்பவர்களின் பட்டியல் இஸ்லாமிய வரலாற்றில் நீண்டு பரந்து காணப்படுகின்றது.

தங்களிடமிருந்து கைவிட்டுப் போன மத, அரசியல் அதிகாரங்களை திரும்பவும் கைப்பற்ற யூதர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைத் தோல்வியுறச் செய்த இஸ்லாத்தின் அதீத வளர்ச்சி, யூத மத குருமார்களுக்கும், ரப்பிகளுக்கும் இஸ்லாத்தின் மீதான அதீத பயத்தை பிற்காலத்தில் தோற்றுவித்தது. எனவே அதனை எதிர் கொள்வதற்கான செயல்திட்டங்களை மும்முரமாக வகுக்க ஆரம்பித்தனர்.

முஸ்லிம்கள் மனதிலிருந்து இஸ்லாத்தை அகற்ற வேண்டுமெனில் அவர்கள் நம்பிக்கையின் அடித்தளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மீதான சந்தேகத்தை தோற்றுவிப்பதே தலையாய பணியாக இருக்க வேண்டும் என்ற வகையில் யூதர்கள் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தனர்.
இஸ்லாத்தை நன்கு விளங்கி, முஸ்லிம் பெயர்களில் வலம்வந்த யூதர்கள், இஸ்லாத்தின் அடித்தளமான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களும் தான் இஸ்லாமிய எழுச்சியின் அடித்தளங்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, முஸ்லிம்கள் மனதிலிருந்து இஸ்லாத்தை அகற்ற வேண்டுமெனில் அவர்கள் நம்பிக்கையின் அடித்தளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மீதான சந்தேகத்தை தோற்றுவிப்பதே தலையாய பணியாக இருக்க வேண்டும் என்ற வகையில் தங்கள் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தனர். (இந்த ஆதிகாலத்து உத்தியைத் தான் இன்றைய நவீன இஸ்லாமோஃபோபிக்குகள் செய்வதை தமிழிணையத்தை வலம் வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்)

இறைவனால் பாதுகாக்கப்பட்ட அருள்மறையாம் திருக்குர்ஆனின் வசனங்களில் எவ்விதமான ஒரு மாற்றத்தையும் கொண்டு வர இயலாது என்பதைப் புரிந்து கொண்டு, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் இடைச்செருகல்களைத் திணிக்க ஆரம்பித்தனர். இது தொடர்பாக யூதர்கள் பறித்த முதல் வெற்றிக் கனிதான் நாம் முன்னர் குறிப்பிட்ட மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைச் சம்பவம். எனினும், இந்தக் கையாடல்களை வெகு வேகத்தில் உணர்ந்தெழுந்து கொண்ட இஸ்லாமியச் சமூகம், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை மிகத் தெளிவாக தரம் பிரித்துத் தொகுத்து வைக்க ஆரம்பித்து விட்டது. இந்த முயற்சியில் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் தெளிவாக அலசப்பட்டு நம்பகத் தன்மை புடம்போடப்பட்டுவிட்டது.

1428 வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களின் இந்த சுருக்கம், இன்றைய இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடான "இஸ்லாமியத் தீவிரவாதம், பயங்கரவாதங்களின்" மறுபக்கத்தைத் தெளிவாக தோலுரிக்கின்றன. கடந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் பல்வேறு பிரச்சனைகளில் தலை கொடுத்து சிதறிப்போன யூத சமூகம், ஒரு கால கட்டத்தில் இருப்பதற்கு இடமின்றி உலகின் நாலா பக்கங்களிலும் கிறிஸ்தவ சிலுவைப்படையினராலும், ஹிட்லர் போன்ற யூத எதிர்ப்பு ஆட்சியாளர்களாலும் ஆட்டுவிக்கப்பட்டனர். தாமதமாக அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட யூதர்கள் மிகத் தெளிவாக திட்டம் வகுத்து இன்று உலகின் அனைத்து அதிகார பீடங்களிலும் முடிவுகளை நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக மாறி இருக்கின்றனர்.

இன்றைய கணக்கின்படி அமெரிக்க செனட்டில் அமெரிக்காவிற்கு மிக அதிக அளவு நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் யூதப் பணக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அமெரிக்காவின் அதிகார உயர் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்திபடைத்தவர்களாக (lobbyist) இவர்கள் உள்ளனர். ஆரம்ப காலத்தில் எவ்வாறு இஸ்லாத்தை அழித்தொழிக்க பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்பட்டனரோ, அதே ரீதியில் இன்றும் இவர்களே செயல்படுகின்றனர் என்பதை மீண்டும் தனியாகக் கூற வேண்டியதில்லை. இதற்கும் இன்றைய இஸ்லாத்தின் அதீத வளர்ச்சியே இவர்களின் அடிமன பயத்திற்கு காரணம் எனபதில் சந்தேகமில்லை. சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி,

கடந்த 50 வருடங்களில் மட்டும் 235% க்கும் மேலாக (1.6 பில்லியனுக்கும் மேல்) இஸ்லாமியர்கள் பெருகியுள்ளனர். பரவி வரும் கிறித்துவத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிறித்துவம் 47% மட்டுமே அதிகரித்துள்ளது. பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய சமயமாக இஸ்லாம் முன்னணி வகிக்கிறது.  உலகின் நான்கு பேர்களில் ஒருவர் இஸ்லாமியராய் இருக்கிறார்.

** 1989-1998 வருடத்திய புள்ளி விபரங்கள்: (இஸ்லாம் பரவும் எண்ணிக்கை சதவீதத்தில்)
வட அமெரிக்கா:
25%
ஆப்ரிக்கா:
2.15%
ஆசியா:
12.57%
ஐரோப்பா:
142.35%
லத்தீன் அமெரிக்கா:
4.73%
ஆஸ்திரேலியா:
257.01%
இந்த அதிவேக வளர்ச்சியினால் எழுந்த பயம் மற்றும் பித்தலாட்டங்கள் பலனளிக்காததன் மூலம் எழுந்த இயலாமை ஒரு கட்டத்தில் முற்றிப்போய் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை மோசமாகச் சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டு தங்கள் மனவெறுப்பை வெளிப்படுத்தும் நிலைக்கு இவர்களை கொண்டு சென்று விட்டது.

இஸ்லாமிய வளர்ச்சியை சீர்குலைக்க, ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு திட்டங்களை வகுத்து அதில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறிப் பெற்று வந்த யூதர்களுக்கு, இந்நூற்றாண்டு பொற்காலம் என்றால் அது மிகையாகாது.

அன்று விதைத்திருந்த எல்லாவிதமான திட்டங்களுக்கும் உரிய அறுவடையை இன்று பெற்றுக் கொள்கின்றார்கள் என்றே கூறலாம். இன்று உலகம் முழுக்க இஸ்லாத்தின் மீதான ஒருவித பயம் முழுமையாக ஓர் பனித்திரை போன்று நிலவி வருகின்றது. இதன் ஒரு பகுதியே நபி(ஸல்) அவர்களுக்கு எதிரான கார்ட்டூன், இஸ்லாமிய தீவிரவாதம்/பயங்கரவாதம் என்ற சொல்லாடல்கள், பேணுதலாய் காட்சியளிக்கும் தாடி, தொப்பி, ஹிஜாப் போன்ற இஸ்லாமிய அடையாளங்களுடன் காண்பவர்களையெல்லாம் பயத்துடனே எதிர் கொள்ளல் போன்றவை.

திட்டமிட்டுப் பரப்பப்படும் இஸ்லாமோஃபோபியா நோயில் சிக்குபவர்களில் பெரும்பாலானோர், உண்மையில் இஸ்லாத்தின் அடிப்படைகளை சிறிதும் அறியாதவர்களாகவே உள்ளனர். ஆனால் அதே நேரம் அவ்வாறு கண்மூடித்தனமாக இஸ்லாமிய கோட்பாடுகளை எதிர்ப்பவர்களே சில நேரம் இஸ்லாத்தின் முகத்தினைக் குறித்து தெளிவான கோணத்தில் அறிய நேரும்பொழுது இருள் விலகி இஸ்லாத்தினுள் நுழையும் எதிர்மறை சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுவதை காணமுடிகின்றது. அமெரிக்க 9/11 இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின் இஸ்லாத்தின் மீது திருப்பி விடப்பட்ட எதிர்மறை பிரச்சாரத்தின் விளைவுகளில் இதுவும் நடந்தது நினைவு கூரத்தக்கது.

எது எப்படி இருந்தாலும், இஸ்லாத்தின் மீதான தாக்குதல் இன்று வீறு கொண்டு எழுப்பப்படுவதும் அதில் இஸ்லாத்தின் கொள்கைகள், வாழ்க்கை முறைகள் தவறாக வியாக்கியானிக்கப்படுவதும் பரவலாக நடைபெற்றே வருகின்றன.

மேற்கத்திய ஆதிக்கவாதிகளின் இத்தகு செயல்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றவைகளே என்பவற்றிற்கு ஆதாரமாக, இஸ்லாமோஃபோபியா-வின் உட்கூறுகளை ஆராய்ந்து கடந்த நவம்பர் 1997 இல் Runnymede Trust வெளியிட்டுள்ள அறிக்கையான Islamophobia: A Challenge For Us All யில் காணப்படும் இஸ்லாமோஃபோபியாவை பிரதிபலிக்கும் எட்டு விஷயங்களை குறிப்பிடலாம். இவை மேற்குறிப்பிட்ட இஸ்லாத்தின் மீதான தாக்குதல்களுக்காக வகுத்துக் கொண்ட 5 அடிப்படை விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக, சாமான்ய மனிதர்களுக்குக் காதில் பூவையும், கண்களில் இலவசமாக ஒரு மஞ்சள் கண்ணாடியும் வலுக்கட்டாயமாக அணிவிக்கப்பட்டு தொடர்ந்து இஸ்லாத்தைக் குறித்த பயப்பாடம் நடத்தப்படுவதை புரிந்து கொள்ளலாம்.

Runnymede Trust- ன் அறிக்கையின்படி, 'இஸ்லாம்' என்பது, இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் கொண்ட இஸ்லாமோஃபோபியாக்களின் பார்வையில் இவ்வாறுதான் பார்க்கப்படுகின்றது.

அதாவது இஸ்லாம் - என்றால்...

1. வளைந்து கொடுக்காத தன்மையுடையது; காலத்திற்கேற்ற மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாதது.

2.
பிற மதக்கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதுடன், அதன் மூலம் எத்தகைய சாதக பாதகத்தையும் எதிர்பார்க்காமல் இருக்கக்கூடியது.

3.
மேற்கத்தியவர்களை இழிவாகக் கருதக்கூடியது; காட்டுமிராண்டித்தனமானது; அறிவுக்குப் பொருந்தாதது; புராதான காலத்தியது; காமுகர்களைக் கொண்டது.

4.
மூர்க்கமான, வலியத்தாக்கும் தன்மையுள்ள, அச்சுறுத்தக்கூடிய, பயங்கரவாதத்திற்குத் துணைபோகக்கூடியது; மனித சமுதாயத்திற்குள் சச்சரவுகளை ஏற்படுத்தக்கூடியது.

5. நுண்புலத்துடன் அரசியல் மற்றும் ராணுவ அனுகூலங்களுக்காகவும் பயன்படுத்தப்படக்கூடியது.

6. மேற்கத்திய நாடுகளால் கண்டறியப்படும் அதிலுள்ள குறைகளை நிராகரித்து விடக்கூடியது.

7. பொதுவாக ஒரு நாட்டிலுள்ள சமுதாயம் செல்லும் கலாச்சாரப்போக்கின் கீழ் கலக்காமல் தனித்து நிற்கக்கூடியது.

8.
முஸ்லிம்களுக்கெதிரான பகைமையை வெகு இயல்பான கண்ணோட்டத்திலேயே பார்க்கக் கூடியது.

உருண்டாலும் பிரண்டாலும் இஸ்லாத்தின் மீது அவதூறைப் பூச மேற்கூறப்பட்ட இவற்றைத் தவிர வேறு காரணங்களை இத்தகைய ஃபோபியாக்களால் கையாள இயலாது. சமீப கால கட்டங்களில் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்கும் பிரச்சார முறைகளில், மேலே பட்டியலிடப்பட்ட எட்டு தன்மைகளும் அடங்குவதை கவனிக்க வேண்டும். இன்று மக்களின் மனதில் இஸ்லாத்தை குறித்த பயத்தை வலிந்து உருவாக்க வகுக்கப்பட்டுள்ள திட்டங்களின் அடிப்படை வரைவிலக்கணமாகவே இவற்றைக் கொள்ளலாம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...


ARTICLE BY ABU SALIHA [ SATHYAMARGAM ]