Sunday, June 5, 2011

அநியாயத்திற்கெதிரான போராட்டமே மிகச் சிறந்த ஜிஹாத்


இஸ்லாம் வலியுறுத்துகின்ற ஜிஹாத் பல படித்தரங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் உள் ளார்ந்த தீமைகளுக்கும் சீர்கேடு களுக்கும் எதிரான போராட்ட மாகும். முஸ்லிம் சமூகத்தை அழி விலிருந்து காக்கும் பெரும் பணியை இப்போராட்டமே செய்கிறது. முஸ்லிம் சமூகம் சில அடிப்படை களையும் தனித்துவமான சிறப்பம்சங்களையும் கொண் டிருக்கிறது. அவை தொலைந்து போகும்போது அல்லது மறக்கப் படும்போது அது முஸ்லிம் சமூக மாக இருக்க மாட்டாது.

முஸ்லிம் சமூகத்தைக் காக்கும் இரு பாதுகாவலர்கள்

முதலாவது ஈமான். முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையே இது தான். ஒவ் வொரு முஸ்லிமின் ஆன்மாவிலிருந்து உருவாகும் பாதுகாவலரே இது.
நம்பிக்கைகளுக்கெதிராக தாக்குதல் தொடுத்து அதனை மழுங்கடிக்கவும் வணக்க வழி பாடுகளை பாழாக்கவும் பெறுமா னங்களை உதாசீனப்படுத்தவும் கண்ணியத்தை சிதைக்கவும் ஷரீ அத்தை செல்லுபடியற்றதாக்க வும் ஒழுக்க விழுமியங்களை புறக்கணிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் சமூ கத்தின் ஆன்மாவிற்கு உருவங் கொடுக்கும் சமூக நிலையே இரண் டாவது பாதுகாவலராகும்.

இந்த பாதுகாவலரை சமூகத்தில் காணப்படும் இஸ்லாமிய சட்டங்களும் அதன் போதனைகளுமே உருவாக்கி வளர்க்கின்றன. சமூகத்தில் நடப்பவற் றிற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பொறுப்புக் கூற வேண்டுமென்பதை அவை வலியுறுத்துகின்றன. ஒரு முஸ்லிம் தன்னைப் பற்றிய கவலையோடு மாத் திரம் வாழ மாட்டான். அவனைச் சூழ இருக்கின்ற சமூகத்தின் கவலையை அவன் சுமந்திருப்பான். கோணலானதை அவன் சீர்செய்வான். கெட்டுப் போனதை சீர்திருத்துவான். வழிகேட்டின் பால் அழைப்பவனை நிராகரிப் பான். அநியாயக்காரனை நெறிப்படுத்துவான். சமூகம் அல்லாஹ் வின் கட்டளைப் பிரகாரம் வாழும் வரை அவன் இப்படியே உழைப்பான். ஒரு விசுவாசி தன்னை சீர்திருத்துவதோடு மாத்திரம் போதுமாக்கிக் கொள்ள மாட்டான். மற்றவர்களை சீர்திருத்துவதற்காக தொடர்ந்து உழைப்பான். முடியுமானவரை தீமைகளுக் கெதிராகப் போராடுவான்.

சமூகத்துக்குள்ளே இருக்கும் போராட்டக் களங்கள்
சமூகத்துக்குள்ளால் அவசியம் நிகழ வேண்டிய இப்போராட்டம் பல களங் களை உள்ளடக்கிள்ளது.
1- அநியாயத்தையும் அநியாயக் காரர்களையும் எதிர்க்கும் களம்.
2- பாவங்களையும் சீர்கேடுகளையும் எதிர்க்கும் களம்.
3- பித்அத்களையும் சிந்தனைச் சறுக்கல்களையும் எதிர்க்கும் களம்.
4- மதம் மாறுதலையும் மதம் மாறியோரையும் எதிர்க்கும் களம்.

அநியாயத்தையும் அநியாயக் காரர்களையும் எதிர்க்கும் களம்

இது அநியாயக்காரர்களது நடவடிக்கைகளைத் தடுத்துநிறுத்தி அவர்கள் பக்கம் சார்ந்திருக்கக் கூடாத களம். "நீங்கள் வரம்பு மீறுபவர்களின் பக்கம் சாய்ந்து விடாதீர்கள். அப்படியானால், உங்களையும் நரக நெருப்பு பிடித்துக் கொள்ளும். அதிலிருந்து உங்க ளைப் பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. பிறகு எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடையாது." (ஹூத்: 113) இங்கு இஸ்லாம் ஒரு முஸ்லிமி டம் இரு அடிப்படைகளை வேண்டுகிறது.

1- யாருக்கும் அநியாயம் இழைக் கக் கூடாது.
2- அநியாயக்காரனுக்கு உதவியாய் இருக்கக் கூடாது.

ஏனெனில், அநியாயக்காரனுக்கு துணைபோனவர்கள் அவனோடு நரகத்தில் இருப்பார்கள். அல்குர்ஆன் அநியாயக்காரர்களைப் பற்றி எச்சரித்தது போலவே அநி யாயக்காரர்களுக்கு துணைபோனவர்களைப் பற்றியும் எச்சரித்திருக் கிறது. "நிச்சயமாக பிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவ ரின் தொண்டர்களும் தவறிழைத் திருந்தனர்" (அல்-கஸஸ்: 8)

பிர்அவ்ன் பற்றிக் கூறும்போது "எனவே நாம் அவனையும் அவனது இராணு வத்தையும் பிடித்துக் கடலில் எறிந்து விட்டோம். அநியாயக்காரர்களின் முடிவு எப்படி யாயிற்று என்பதை நீங்கள் கவனியுங்கள்." (அல்-கஸஸ்: 40)

அநியாயக்காரனையும் அவனது படைகளையும் அநியாயம் செய்தவர்களா கவே அல்குர்ஆன் கணிப்பிடுகிறது. அல்லாஹ்வின் தண்டனை இறங்கினால் அது அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொள்ளும். பூமியில் பெருமைய டித்து அடக்குமுறை புரியும் சண்டாளர்கள் அநியாயமிழைக்கும் போது மக்களை அடக்கவும் தேசத்தை சீர்குலைக்கவும் தேவையான மனிதக் கருவிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (றஹ்) குர்ஆன் படைக்கப்பட்டதுஎன்ற பிரபல விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார்கள். ஒருநாள் சிறைக் காவலர்களில் ஒருவன் இமாம வர்களிடம் அநியாயக்காரர்களுக்கு துணைபோனவர்கள் பற்றியும் அல்லாஹ் விடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி வந்துள்ள ஹதீஸ் களைப் பற்றியும் வினவினான்.

அவை ஸஹீஹான ஹதீஸ்கள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவன் இமாமவர்களிடம் என்னைப் போன்றவர்களும் அநியா யக்காரர்களுக்கு துணைபோனவர்களா? என்று கேட்க இமாம வர்கள்; "இல்லை நீ அநியாயக் காரர்களுக்குத் துணைபோனவர்களில் ஒருவனாக இல்லை. அநி யாயக்காரர்க ளுக்கு துணை போன வர்கள் என்பவர்கள் உனக்கு உடைதந்து உணவு தந்து, உனது தேவையை நிறைவேற்றி வைப் பவர்களே. உன்னைப் பொறுத்த வரை நீ அநியாயக்காரர்களில் ஒரு வன்" என்று பதிலளித்தார்கள்.

ஸஹீஹான அறிவிப்பொன்றில்; "நீ உனது அநியாயக்கார அல்லது அநியாயம் இழைக்கப்பட்ட சகோதரனுக்கு உதவி செய்" என்று வருகிறது. யா றஸூலல் லாஹ் நாம் அநியாயம் இழைக்கப்பட்டவர்களுக்கு உதவலாம். ஆனால் அநி யாயக்காரர்களுக்கு எப்படி உதவி செய்வது என்று ஸஹாபாக் கள் வினவ; நீ அநியாயம் செய் வதிலிருந்து அவனைத் தடுப்பதே அவனுக்கு செய்யும் உதவியாகும்" என்று பதிலளித்தார்கள்.

அநியாயம் எல்லாம் ஒன்றுதான்; அது செல்வந்தர்கள், ஏழைகளுக்குச் செய்யும் அநியாயமாக இருக் கலாம். அல்லது உரிமையாளர்கள் கூலிக்கிருப்பவர்களுக் கும் முதலாளிகள் தொழிலாளர்களுக் கும், தளபதிகள் படையணிக ளுக்கும், தலைமைகள் மக்களுக்கும் ஆண்கள் பெண்களுக்கும் பெரியவர்கள் சிறியவர்க ளுக்கும், ஆட்சியாளர்கள் (பொறுப்பு மிக்கவர்கள்) மக்களுக்கும் தமது பொறுப் பின் கீழுள்ளவர்களுக்கும் இழைக்கும் அநியாயமாகவும் இருக்கலாம். இவை ஒரு மனிதன் தனது சக்திக்குட்பட்டவரை கையினாலோ அல் லது நாவி னாலோ அல்லது உள் ளத்தினாலோ போராட வேண்டிய, எதிர்க்க வேண்டிய விடயங்களா கும்.

இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபியவர்கள் சொன்னார்கள்; "எனக்கு முன் பிருந்த சமூகத்திற்கு அல்லாஹு தஆலா அனுப்பிய எந்த வொரு நபிக்கும் அந்த சமூகத்தில் அவரது வழிமுறையை எடுத்துக் கொண்டு அவரது கட்டளையைப் பின்பற்றுகின்ற நேசர்களும் தோழர்களும் இருந்தனர். ஆனால், அவர்களுக்குப் பின்னர் சிலர் வருவார்கள்; அவர்கள், செய்யாத வற்றைப் பேசுவார்கள். ஏவப்படாதவற்றை செய்வார்கள். யார் தனது கரத்தினால் அவர்களோடு போராடுகிறாரோ அவர் முஃமின். யார் அவர்க ளோடு நாவினால் போராடுகிறாரோ அவரும் முஃமின். யார் அவர்களோடு உள்ளத்தால் போராடுகிறாரோ அவரும் முஃமின். அதற்கப்பால் ஈமானில் கடுகளவும் கிடையாது.

அநியாயம் மற்றும் அநியா யக்காரர்களுக்கெதிராக தன்னால் முடியுமானளவு கரத்தாலோ, நாவினாலோ உள்ளத்தாலோ போராடுவதை நபியவர்கள் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாக்கியிருக்கிறார்கள். இதுவே ஈமா னின் கடைசிப் படித்தரமாகும். இவைகளை யார் விட்டுவிடுகிறாரோ அவர்க ளுக்கு ஈமானில் ஒன்றுமே கிடையாது. நபியவர்கள் கடுகின் அளவை உதார ணம் காட்டி அதனை விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். அநியாயத்தையும் தீமையையும் உள்ளத்தால் வெறுப்பதும் அநியாயக் காரர்களையும் பாவி களையும் வெறுப்பதும் இங்கு வலியுறுத் தப்பட்டிருக்கிறது. இந்தவகைப் போராட்டத்தைத் தடுப்பதற்கு யாருக்குமே சக்தி கிடையாது. ஏனெனில், முஃமினின் உள்ளத்தில் அதனைப் படைத்த இரட்சகனைத் தவிர வேறு எவராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

இஸ்லாம் இவ்வகைப் போராட்டத்தில் கவனம் செலுத்தியுள்ளது. அதனை மிகவும் வலி யுறுத்தியுள்ளது. சில ஹதீஸ்கள் அதனை மிகச் சிறந்த ஜிஹாத் என்கிறது. தாரிக் இப்னு ஷிஹாப் அல் பஜலி (றழி) அறிவிக்கிறார் கள்; ஒரு மனிதர் போருக்குத் தயா ராகிய நிலையில் நபியவர்களிடம் "ஜிஹாதில் எது மிகச் சிறந்தது?" என வினவுகிறார். "கொடுங்கோல் அரசனி டத்தில் சத்தியத்தை சொல்லுதல்" என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; நபியவர்கள் சொல்லுகிறார்கள்; ஷுஹதாக்களின் தலைவர் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபுடன் கொடுங்கோல் மன்னனிடம் சென்று சத்தியத்தை ஏவி, தீமை யைத் தடுத்து பின்னர் அவனால் கொல்லப்பட்ட மனிதரும் இருப்பார் என்றார்கள்.

இங்கு நபியவர்கள் அடக்கு முறை புரியும் அநியாயக்கார அரசர்களின் முகத்தில் சத்தியத்தை சொல்ல வேண்டுமென்று உம்மத் தைத் தூண்டியிருக் கிறார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் துன்பங்க ளையோ அதில் கொல்லப்படுவ தையோ பொருட்படுத்த மாட்டார்கள். ஒரு முஸ்லிம் தனது வாழ்வு ஷஹாதத்துடன் முடிய வேண்டுமென்று வைத்தி ருக்கின்ற ஆசை மிக உயர்ந்தது. அப்படி மரணித்தால் அவனால் அல்லாஹ் வினதும் அவனது தூதரினதும் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட ஷஹீதுகளின் தலைவர் ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிபுடன் இருக்க முடியும்.

நபியவர்கள் ஏன் இந்தவகை ஜிஹாதை மகத்துவப்படுத்தி அதனை மிகச் சிறந்த ஜிஹாத் என்று கருதினார்கள். ஏன் அதில் கொல்லப்படுபவர்களை ஷுஹ தாக்களின் தலைவரின் அருகே இருப்பார் என்றார்கள்?

காரணம், உள்ளார்ந்த சீர்கேட் டின் அபாயம் உயரும்போது அது சமூகத்தில் பாரிய தீங்கை உருவாக்கிவிடும். இதனால்தான் இஸ்லாம் வெளியில் இருந்து வரும் குப்ருக்கும் அத்துமீறலுக் கும் எதிராகப் பேராடுவதைவிட உள்ளிருந்து வரும் அநியாயத்திற் கும் சீர்கேட்டிற்கும் எதிராகப் போராடுவதை முதன்மைப் படுத் தியிருக்கிறது. உள்ளார்ந்த சீர்கேடு அதிகமாக புற அத்துமீறல்களுக்கு தளமாக அமைந்துவிடுகிறது.

ஸூறா இஸ்ராவின் ஆரம்ப வசனங்கள் இதனைத்தான் பேசு கின்றன. பனூ இஸ்ரவேலர்கள் பூமியில் இரு தடவைகள் நாசம் விளைவித்தபோது அவர்க ளுக்கு நடந்ததை அந்த வசனங்கள் எமக்கு சொல்கின்றன. அவர்கள் பெரும் அத்துமீறல்களைப் புரிந் தார்கள். அவர்களுக்கு மத்தியில் இந்தத் தீமையைத் தடுக்கவோ அதனை எதிர்க்கவோ ஒருவரையும் காணவில்லை. அல்லாஹு தஆலா வெளியிலிருந்து எதிரிகளைக் கொண்டுவந்து அவர்களுக் கெதிராக சாட்டிவிட்டான். அவர்கள் அவர்களது வீடுகளுக்குள் ளால் ஊடுருவிச் சென்ற னர். அவர்களது வழிபாட்டுத் தளங்களை அழித்தனர். அவர்களின் தௌராத்தை எரித்தனர். மிக மோசமான முறையில் அவர்களை வேதனை செய்தனர். அவர்கள் எவற்றில் மிகைத்திருந்தார்களோ அவற்றையெல்லாம் அவர்கள் இடித்தழித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். அல்லாஹ்வின் வாக்குறுதி அங்கு நிறைவேறியது.

இங்கு நாம் சீர்கேடும் ஒழுக்க வீழ்ச்சியும் பெரும் போருக்கும் ஆக்கிரமிப்புக் கும் நுழைவாயிலாக இருந்திருப்பதைக் காண்கிறோம். இதுபோன்ற சீர்கேடு கள் எதிர்காலத்தில் ஏற்பட்டால் இப்படியான தண்டனைகளே கிடைக் கும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான். "சிலவேளை அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டாலாம். நீங்கள் மீண்டால் நாமும் மீட்டுவோம்." (இஸ்ரா: 08) அதாவது நீங்கள் மீண்டும் அத்துமீறி சீர்கேட்டை விளைவித்தால் நாம் மீண்டும் உங்களுக்கெதிராக எதிரிகளை சாட்டி விடுவோம்.

உளப் போராட்டம் பற்றிய புரிதல்

உளப்போராட்டம் என்பது ஒரு தீமையைக் கண்டு உள்ளம் கொதிப்படைவதும் அநியாய த்தை வெறுப்பதும் சீர்கேட்டை நிராகரிப்பதுமாகும். இந்தக் கோபமும் வெறுப்பும் மறுப்பும் உளப்புரட்சியும்  உள்ளத்தில் நிறையும்போது அது அந்தப் புரட்சியை அர்த்தம் நிறைந்த தாக்கிவிடுகின்றது. அநியாயத் தையும் சீர்கேட்டையும் அது வேரோடு பிடுங்கியெறிகிறது.

அநியாயம் கோலோச்சுவதை யும் சீர்கேடுகள் மென்மேலும் அதிகரிப்பதையும் பாவங்கள் வளர்வதையும் ஒரு முஃமின் கண்டு அதனை கரத்தால் மாற்ற முடியாது போய் நாவினால் கூட ஏதும் செய்ய முடியாத நிலையில் அவனது உள்ளம், பாத்திரத்தில் கொதிக்கும் சுடு நீரைப் போல கோபத்தால்  கொதிக் கிறது. தொடர்ந்து கொதிக்கும் நிலையில் அந்தப் பாத்திரம் மூடப்பட்டிருந் தால் அது வெடித்துவிடும். இந்த உணர்ச்சி நிலையே எந்த வொரு மாற்றத் துக்கும் மூலதனமாகக் காணப்படுகின்றது. மாற்றம் என்பது பூச்சியத்திலிருந்து ஆரம்பப்பதில்லை. அதற்கு பல முன்னுரைகளும் உளத்தூண்டற் காரணிகளும் காணப்படுகின் றன.

இந்தவகையில் அநியாயத்திற்கும் சீர்கேட்டிற்குமெதிரான போராட்டம் அவசிய மானதாகவும் ஏனையவற்றைவிட முக்கிய மானதாகவும் சமூகத்தை அதன் தீங்கிலிருந்து பாதுகாப்பதாகவும் அமைகிறது. தீமைகள் கொழுந்து விட் டெரிந்து அதன் அபாயம் பரவ முன்னர் அதனை அணைக்க இப்போராட்டம் அவசியப்படு கின்றது. நபியவர்களின் சுன்னா நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களைப் புகழ்வதைப் போல அல் குர்ஆன் அப்பணியில் ஈடுபடுபவர்களைக் கொலை செய்வதை மிகக் கடுமை யாக கண்டித்திருக்கிறது. அதனைப் பெரும் பாவமாகக் கருதுகிறது.  இதில் ஈடுபடுபவர்களுக்கு இம் மையிலும் மறுமையிலும் தண்டனை இருக்கின்றது.

"நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து உரிமையின்றி நபி மார்களையும் கொலை செய்து மனிதர்களுக்கிடையே நீதத்தைக்கொண்டு ஏவுகின்ற வர்களையும் கொலை செய்கின்ற வர்களுக்கு துன்புறுத்தும் வேத னையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக! அத்தகையவர்களின் செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து விட்டன. அவர்களுக்கு உதவுபவர்கள் யாருமில்லை." (ஆல இம்றான்: 21,22)

ARTICLE FROM SHIEK YUSUF KARLAVI,IN TAMIL DEEN SALAHI,FROM MEELPARVAI. 

No comments:

Post a Comment