"கி.பி. 16, 17 ஆம் நூற்றாண்டு கள் மனித வரலாற்றின் மிக முக்கிய மான காலகட்டங்களாகும். அந்தக் காலப்பகுதியில் தான் ஐரோப்பா தனது நீண்ட தூக்கத்திலிருந்து விழித் துக் கொண்டது" என்று அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி குறிப்பிடு வது வரலாறு கண்டதொரு உண்மை யாகும். ஏனெனில், குறித்த நூற் றாண்டுகளுக்கு முன்னைய ஐரோப் பாவும், பின்னைய ஐரோப்பாவும் தம்மளவில் பெருத்த வித்தியாசங் களை கொண்டிருந்தது. இதனது பின்னணி குறித்தே கட்டுரை நோக்கு கின்றது.
வளர்ச்சி கண்ட நாகரீகங்களது பின்னணியை அவதானிக்கையில் புலப்படும் ஒரு விடயம்தான் "மற் றைய நாகரீகங்களது பங்களிப்பு" இன்றைய மேற்கின் எழுச்சிக்குப் பின்னாலும் பிறிதொரு நாகரிகம் மறைந்து நிற்கிறது. அந்த நாகரிகத் தின் அறிவியல் ஆய்வுகள், விஞ் ஞான முயற்சிகள் ஆகியவற்றின் துணை கொண்டே எழுச்சி கண்டுள் ளது. இன்னும் தெளிவாகச் சொல் வதானால் இஸ்லாமிய நாகரிகத்தின் துணை கொண்டு தான் ஐரோப்பா எழுச்சி கண்டது.
மத்திய கால ஐரோப்பாவில் அறிவு, ஆய்வு ஆகிவற்றிற்கான மதிப்பீடு தாழ்ந்த நிலையில் காணப் பட்ட போது இஸ்லாமிய உலகு அதற்கு நேர் முரணாக அறிவு, ஆய் வுக்கான மதிப்பீட்டை முழுமையாக வழங்கியது. எனவே, தான் வரலாற் றில் ஐரோப்பிய மாணவர்களது இஸ்லாமிய உலகுக்கான அறிவுசார் பயணங்களைக் காண்கிறோம். சமூ கங்களின் எழுச்சிக்கான மிக முக்கிய காரணியாகக் கொள்ளப்பட்ட "அறிவு" இஸ்லாமிய உலகில் பரந்து காணப்பட்டதே இதற்கான காரண மாகும்.
நவீன வரலாற்றில் மத்தியகாலம் வானியல் துறையின் பொற்காலமாக கூடக் காணப்பட்டது. இஸ்லாமிய உலகும் இத்துறையில் தனது கவனக் குவிப்பை மேற்கொண்டிருந்தது. அபூ மஃஷர் என்ற வானியலாளர் வானியல் குறித்து நான்கு புத்தகங் களை எழுதியிருந்தார். வானியலா ளர் குவாரிஸ்மி ஒரு வானியல் அட்ட வனையையும் தொகுத்திருந்தார். இவையனைத்தும் Jhon of seville, Adlard of Bath ஆகியவர்களால் லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட் டன. இவற்றுக்கூடாக ஐரோப்பா வில் வானியல் குறித்த புதிய துணுக்குகள் பரவலாயின.
அல்-பதானி என்ற வானியலாளர் தயாரித்த வானியல் அட்டவணையும் கூட Plato of trivoli என்பவரால் லத்தினுக்குப் பெயர்க்கப்பட்டது. கிறிஸ்தவ பாதிரிமார்களது தண்ட னைக்கு அஞ்சி தனது ஆய்வு முடிவை மரணத்திற்குப் பின் வெளியிடுமாறு வேண்டியிருந்த கொம்பர்னிகஸ் கூட தனது ்ஈஞு கீஞுதிணிடூதணாடிணிண ணிஞதடிதட் ஞிணிஞுடூஞுண்ணாடிதட்சு என்ற நூலில் அஸ்ஸர் காவி, அல்பதானி ஆகிய வானியா ளர்களது கருத்துக்களை குறிப்பிடுகி றார்.
வானியலாளர் அல் பிரூனி (கி.பி. 973) புவியும் ஏனைய கோள் களும் சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்தை கொம்பர்னிகஸுக்கு 05 நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே முன்வைத்தார். இவ்வாறு முஸ்லிம் உலகு பெறறிருந்த வானியல் அறிவு படிப்படியாக லத்தினுக்கு மொழி பெயர்க்கப்பட்டதினூடாக ஐரோப்பா வானியல் குறித்த அறிவைப் பெற் றுக் கொண்டது.
மருத்துவத் துறையில் கூட முஸ்லிம்களது ஆய்வுகள், கண்டு பிடிப்புகள் ஊடாகவே மேற்கு தன்னை விருத்தி செய்துகொண்டது. இஸ்லாமிய உலகுக்குள்ளால் பெயர் க்கப்பட்டதினூடாகவே ஐரோப்பா மருத்துவம் குறித்த விரிந்த அறி வைப் பெற்றுக் கொண்டது. அர் ராஸி என்ற மருத்துவ அறிஞர் பத் துப் பாகங்களைக் கொண்ட "அல் கிதாபுல் மன்ஸூரி" என்ற நூலைத் தொகுத்தார்.
15 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த நூல் லத்தினுக்கு மொழிபெயர்க்கப்பட்டது. Edwarde Browne என்ற எழுத்தாளர் அர்ராஸி குறித்து "அர்ராஸி (கி.பி. 923) புத் தாக்கச் சிந்தனை கொண்ட முஸ்லிம் மருத்துவர். அவர் அதிக திறமை வாய்ந்தவர்" என்று எழுதுகிறார்.
அர்ராஸி அவர்களது சின்ன ம்மை, வைசூரி குறித்த ஆய்வு, இந்த நோய்கள் குறித்த முதலாவது மிக நுணுக்கமான ஆய்வாகும். இந்த ஆய்வும் 1565 இல் லத்தினுக்கும் 1847 இல் ஆங்கிலத்துக்கும் பெயர்க் கப்பட்டது. இவரது "அல்ஹாவி" என்ற 20 பாகங்களைக் கொண்ட புத்தகமும் 1297 இல் லத்தினுக்கு மொழி பெயர்க்கப்பட்டது.
கலீபா ஹாரூன் ரஷீதினால் பக் தாதில் முதலாவது மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய உலகின் பல பிரதான நகரங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றில் போதிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள் தான் பிற்கால ஐரோப் பிய மருத்துவக் கல்லூரிகளின் பாடத் திட்டமாகக் கொள்ளப் பட்டன.
இவற்றில் "பிர்தௌஸுல் ஹிக்மா" என்ற நூல் குறிப்பிடத்தக்கதாகும். இப்னு காஸிம் அஸ் ஸஹ்ராவி அல்குர்துபி (கி.பி. 1014) என்ற மருத்துவ அறிஞர் "அத்தஸ்ரிஃப்" என்ற பெயரில் ஒரு மருத்துவக் கலைக் களஞ்சியத்தைத் தொகுத்தார். இதன் சில பகுதிகள் 16 ஆம் நூற்றாண்டில் லத்தினுக்கு மொழி பெயர்க்கப் பட்டதோடு 1778 இல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினாலும் இது பதிப்பிக்கப்பட்டது. இப்னு ஸீனாவின் "அல் கானூன் பித்’திப்" என்ற நூலும் மேற்கின் மருத்துவ அறிவுக்கு ஒரு முன்னோடியாகக் காணப்பட்ட நூலாகும். 15 ஆம் நூற்றாண்டில் மாத்திரம் இது 15 இற்கும் அதிகமான தடவைகள் பதிப்பிக்கப்பட்டது.
இவ்வாறு ஏனைய துறைகள் சார்ந்த அரபு நூல்களையும் இவற் றையும் மொழிபெயர்க்கும் பணியை ஐரோப்பிய மொழியியலாளர் களும் யூதர்களும் செய்தனர். இவற்றை நோக்குகின்றபோது மேற்கின் எழுச்சிக்குப் பின்னணியில் இஸ்லாமிய நாகரிகத்தின் தாக்கத்தை கண்டு கொள்ளலாம்.
இன்றைய முஸ்லிம்கள் பின்வரும் ஹதீஸை இப்பொழுதே செயற்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
எங்கு கண்டாலும் பொறுக்கிக் கொள்ளட்டும்."
SOURCE FROM MEELPAARVAI
No comments:
Post a Comment