Monday, June 6, 2011

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு

இன்று உலகின் வல்லரசு என்று சோல்லிக் கொள்கின்ற அமெரிக்கா உள் ளிட்ட அனைத்து உலகநாடுகளும் எதிர்கொள்கின்ற மிகப் பெரும் சவால் வறுமையாகும்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் -  கூடிக் குறைந்தாலும் - வறுமை நிலை காணப்படுகின்றது. வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, வாழ்க்கைச் சேலவதிகரிப்பு என பொருளாதாரத்தை மையப் படுத்தி நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரிக்கின்ற நிலை. அவ்வாறே அவற்றை எதிர்கொள்ள முடியாமல் பொதுமக்களும்  அரசுகளும் திண்டாடும் நிலை பரவலாகக் காணப்படுகின்றது. மட்டுமன்றி தீர்க்க முடியாமல் திண்டாடும் பிரச்சினைக் குத் தீர்வை வழங்குவதற்காக அரசுகள் கடன்களை நாடுகின்றன. இதன் பாதிப்பும் காலப் போக்கில் பொது மக்கள் மீதே சுமத்தப்படுகின்ற நிலையை காண்கின்றோம்.

தடியெடுத்தவன் தண்டல் காரன் என்பது போல, அதிகாரமும் பண பலமும் உள்ளவர்கள் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருப்பதனைப் பார்க்கின்றோம். அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் தமது வயிறு, தமது குடும்பம் என்றே வாழ்ந்து வருகின்றனர்.  பொதுமக்கள் தமது அன்றாட வாழ்வை கடத்துவதில் பல்வேறு கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர். இதற் கான  மிகச்சரியான திட்டங்களையும் தீர்வுகளையும் வழங்குவது அரசினதும் அரசியல்வாதி களினதும்  கடப்பாடாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் உமர் இப்னு அப்தில் அஸீஸின் காலத்தை முக்கிய மான காலப்பிரிவாக இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் அடையாளப்படுத்து கின்றனர். அக்காலப்பகுதியில் பொருளாதார அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், நடைமுறைப் படுத்தப்பட்ட நட வடிக்கைகள் முக்கியமானவை. வறுமை நிலை முற்றாக தணிக்கப்பட்ட ஒரு நிலை அவரது ஆட்சிக் காலப்பகுதியில் காணப்பட்ட சிறப்பம்சமாகும். சமூகத் தில் அல்லது ஒரு நாட்டில் வறுமை நிலையிலுள்ளவர்களை மீட்டெடுப்பது ஒரு அரசின் பொறுப்பும் கடமைப்பாடுமாகும். ஒரு சமூகத்தில் அல்லது ஒரு நாட்டில் யாரும் வறுமையினால் கஷ்டப்படும் நிலையில் இருக்கக் கூடாது என்பதனை நடைமுறையில் சேயற்படுத்திக் காட்டினார் உமர் இப்னு அப்தில் அஸீஸ்.

அவரது காலத்தில் தான் ஸகாத் மிகப் பெரும் பொருளாதாரத் திட்டமாக பரந்தளவில் நடைமுறைப் படுத்தப்பட்டது. பாரியளவில் ஸகாத் சேகரிக்கப்பட் டது. சேகரிக்கப்பட்ட ஸக்காத்தை உரிய முறையில் விநியோகிக்குமாறு வேண்டினார். முதலில் அச்சமூகத்தில் காணப்பட்ட ஏழைகளுக்கும் வறியவர்க ளுக்கும் வழங்குமாறு கட்டளையிட்டார். அவ்வாறே நாட்டில் காணப்பட்ட அனைத்து ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் ஸகாத் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின்பு சேகரிக்கப்பட்ட ஸகாத்தில் பெரும்பகுதி எஞ்சத் தொடங் கியது. யாருமே ஸகாத் பெற்றுக் கொள்ளும் நிலையிருக்கவில்லை. 

பின், முஸ்லிம் படைப்பிரிவினருக்கு ஸக்காத்திலிருந்து வழங்குங்கள் என கட்டளையிட்டார். படைவீரர்களில் யாரும் பணத்தேவையில்லாத அளவுக்கு தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டன. அதன்பின்பும் பெருந்தொகை யான ஸகாத் எஞ்சியிருந்தது. பின் முஸ்லிம்களில் கடன்பட்டிருப்பவர்களின் கடன்களை அடையுங்கள் என வேண்டிக்கொண்டார். அவ்வாறே கடன்பட்டி ருந்தவர்களின் கடன்கள் அடைக்கப்பட்டன. அப்போதும் ஸகாத் எஞ்சியிருந் தது. பின் அஹ்லுல் கிதாபுகளில் கடன்பட்டிருப்பவர்களின் கடன்களை நிவர்த்தி சேயுங்கள் என கட்டளையிட்டார். அவ்வாறே அஹ்லுல் கிதாபைச் சேர்ந்தவர்களின் கடன்கள் அடைக்கப்பட்டன. பின்பும் கணிசமானளவு ஸகாத் எஞ்சியது.

அதனைத் தொடர்ந்து உமர் பின் அப்தில் அஸீஸ் இளைஞர்களில் திருமணம் முடிக்க விரும்புகின்றவர்களுக்கு திருமணத்தை முடித்து வையுங்கள் என வேண்டிக் கொண்டார். அவ்வாறே ஸகாத்திலிருந்து இளைஞர்களுக்கு திரு மணம் நடத்திவைக்கப்பட்டது. அதன் பின்பும் குறிப்பிடத்தக்களவு ஸகாத் எஞ்சியது. பின்பு உமர் "இந்த ஸகாத் பணத்தின் மூலம் தானியங்களை வாங்கி வந்து, அதனை மலைகளில் தூவிவிடுங்கள். அவற்றை பறவைகள் சாப்பிடட்டும். இது முஸ்லிம்களின்  சேல்வத்திலிருந்து பறவைகளுக்குரியதா கும்" எனக் குறிப்பிட்டார். இஸ்லாமிய வரலாற்றில் குறித்துவைக்கப்பட வேண்டிய வார்த்தைகள் இவை.

இது இஸ்லாமிய ஆட்சியில் எந்த உயிரினமும் ஒரு வேளை உணவின்றி வாழாது என்ற சேதியை உலகிற்கு சோல்லிவைக்கின்றது. பறவை மற்றும் மிருகங்களுக்கே உணவுக்கு உத்தரவாதம் வழங்கப்படுவதாயின் அல்லாஹ் வின் பிரதிநிதியான மனிதர்களின் நலனில் எந்தளவு கவனம் சேலுத்தும் என்பதனை விளங்கிக் கொள்ளலாம். அரசு என்பது அந்தளவு பொறுப்பு வாந்ததாகும். ஒரு சமூகத்தில் ஒரு மனிதன் உண்ண உணவின்றி மரணிப் பானாயின் அல்லாஹ் அச்சமூகத்தின் பொறுப்பிலிருந்து நீங்கிக் கொள்கின் றான் என ஹதீஸ் குறிப்பிடுகின்றது. எமது கிராமங்களில் எத்தனை குடும் பங்கள் மிகக் கடுமையான வறுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எமது ஊர்களில் பலமுறை ஹஜ், உம்ரா சேபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.

உலகிற்கே பொருளாதார மாதிரிகளை, முன்மாதிரிகளை வழங்குவதற்கான  மிகச் சரியான வழிகாட்டல்களும் ஆற்றலும் எமது கையில் இருக்கின்றன. ஆனால் நாம் அதனை மிகச் சரியாக விளங்கவுமில்லை, நடைமுறைப்படுத்த வுமில்லை. ஸகாத் என்பது சமூகத்தில் காணப்படுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான மிகச் சரியான தீர்வுத்திட்டமாகும். எமது கிராமங்கள், ஊர்களில் பணவசதி படைத்தவர்கள் அனைவரும் தமது சோத்து சேல்வங் களிலிருந்து மிகச் சரியாக ஸக்காத்தை கணிப்பிட்டுக் கொடுக்கின்ற போது அப்பிரதேசம் வளர்ச்சியடைகின்றது. இவ்வாறாக அனைத்து ஊர்களும் மேற் கொள்கின்ற போது சிறந்த மாற்றத்தைக் காணலாம். எனவே தனித்தனியாக சிறு சிறு தொகைகளைக் கொடுத்து ஸகாத்தின் தாத்பரியத்தை வீணடிக்கா மல் கூட்டுமுயற்சியாக மேற்கொள்கின்ற போது அதன் விளைவு பரந்தளவில் நிலையானதாக இருக்கும்.
பொதுவாக நாட்டில் அனைத்து சமூகத் தரப்பினர் மத்தியிலும் வறுமை நிலை மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் அதன் பாதிப்புகள் இரட்டிப்பானது. வறுமை நிலை சமூகத்தின் கட்டமைப்பை யும் கட்டுக் கோப்பையும் முழுமையாக ஆட்டங்காணச் சேயும். எனவே ஏனைய இபாதத்களுக்கு (ஹஜ், உம்ரா) கொடுக்கின்ற முக்கியத்து வத்தைப் போன்று ஸகாத்தையும் கருதி அதனை நிறை வேற்றுவோம். இதன்மூலம் எமது சமூகத்திற்கு மட்டுமன்றி எமது நாட்டிற்கும் மிகச் சரியான பொருளா தாரத் தீர்வுகளை வழங்கக் கூடியவர்களாக (உமர் பின் அப்தில் அஸீஸ் போன்று) மாறலாம் இன்ஷா அல்லாஹ்.



ARTICLE FROM MEELPARVAI.

No comments:

Post a Comment