"இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதில் பக்கச்சார்புடன் நடந்துகொள்கிறது
அல்லது உரிமைகளை வழங்குவ தில்லை" என விமர்சனம் செய் யும் பலரும் முன்வைக்கும் ஒரு கேள்விதான் "ஏக காலத்தில் ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் முடிக்க இயலுமாயின் ஏன் அவ்வுரிமையைப் பெண் களுக்கு வழங்குவதில்லை?" என்பதாகும்.
இக்கேள்விக்கான யதார்த்த பூர்வமான பதிலை இஸ்லாமிய மார்க்க அறிஞர் இமாம் அபூ ஹனீபா அவர்களது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு தடவை இரண்டு பெண் கள் இமாம் அபூஹனீபா அவர்களி டம் வந்து "ஆண்கள் ஏக காலத் தில் நான்கு பெண்களை மண முடிக்க முடியுமாயின் ஏன் எம் மால் மாத்திரம் முடியாது? ஏன் எமக்கு அவ்வுரிமையை வழங்குவ தில்லை?" என்று கேட்டனர். இதற் குப் பதில் கூற இமாமவர்கள் சிந் தித்துக் கொண்டிருக்கின்றபோது இமாமவர்களின் மகன் ஹனீபா தந்தையின் முன் வந்து இவ்வாறு கூறினார்.
தந்தையே இக்கேள்விக்கான விடையை நான் கூறுகிறேன். என் விடை சரியானதாக இருந் தால் இனிமேல் நீங்கள் உங்களை அபூ ஹனீபா (ஹனீபாவின் தந்தை) என்றுதான் எங்கும் அறி முகப்படுத்திக் கொள்ள வேண் டும்" என்றார். தந்தையும் சம்ம தித்து விட்டார். அவ்விரு பெண் களின் முன்வந்த இமாமவர்க ளின் புதல்வன் ஹனீபா, அவ்விரு வருக்கும் இரண்டு கிணறுகளிலி ருந்து இரு கோப்பைகளில் நீர் கொண்டுவருமாறும் அத்தோடு ஒரு குடத்தையும் எடுத்துவருமா றும் கூறினார். அவ்வாறு அவ்வி ருவரும் அவற்றைக் கொண்டு வந்ததும் அக்கோப்பைகளிலி ருந்த நீரை அக்குடத்திலே ஊற்று மாறு கூறினார். அவர்களும் ஊற்றி விட்டனர். பின்னர் ஹனீபா கூறி னார்; "தற்போது நீங்கள் இரு வரும் கொண்டுவந்த இரண்டு கிணற்று நீரையும் மீண்டும் வேறா க்கி உங்களது கோப்பைகளுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்" என் றார். இரு பெண்களும் ஒருவர் மற்றவரது முகத்தைப் பார்த்து முழித்து நின்றனர். ஹனீபா கூறி னார்; "இப்படித்தான் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே காலத்தில் திருமணம் முடித் தாலோ உறவு வைத்தாலோ நடக் கின்றது" என்று விடயத்தை நாசூக்காக சொல்லிவிட்டார்.
வந்த இருவருக்கும் விடயம் நன்கு புரிந்துவிட்டது. அருகில் நின்ற தந்தை அன்றிலிருந்து தன்னை அபூ ஹனீபா (ஹனீபா வின் தந்தை) என்றே அறிமுகப் படுத்திக் கொண்டார். இன்று வரைக்கும் ‘நுஃமான் பின் தாபித்’ என்ற அவரது இயற்பெயரை விட அபூ ஹனீபா என்ற பெயரி லேயே அவர் பிரபல்யம் பெற்றி ருக்கின்றார்.
ஒரு பெண் ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங் களைச் செய்ய முடியாது என்ப தற்கு இதுவொரு பகுத்தறிவு ரீதியான, தர்க்க ரீதியான யதார்த்த பூர்வமான சான்றாக உள்ளது. இதுவே இறைநியதியும்கூட.
ARTICLE FROM - இஸ்லாஹிய்யா வளாகம்
No comments:
Post a Comment