Saturday, June 4, 2011

பெருமானார்(ஸல்) அவர்களின் அரபா பெருவெளி உரையின் சில பகுதிகள்...

* ( மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.

இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடை மையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக் கவோ கூடாது.) இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டிய திருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங் கள்.

* மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோத ரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத் துவத்தைச் சேர்ந் தவர்கள் நீங்கள்! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தா லன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநி யாயம் செய்வதி லிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கி ஷங்களை விட்டுச் செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழிதவறமாட்டீர்கள்.

முதலாவது திருவேதமான திருக்குர்ஆன். இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்க்கை நெறிகள் (ஸுன்னத்)

* மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக் குப்பி றகு நீங்கள் உங்களுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் நீங்கள் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றி லும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைத்து ஷைத்தானுக்கு (உடன் பட்டு) தலைவணங்கு வீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். (எந்த வகையிலும் ஷைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீகள்)

(ஆதார நூற்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, முஸ்னத் அஹ்மத், இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

No comments:

Post a Comment