Wednesday, June 1, 2011

பயங்கரவாதச் செயல்களோடு முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை

Europol எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் காவல் நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் ஐரோப்பாவில் இடம் பெறும் 99.6 வீதமான பயங்கரவாதச் செயல் களோடு தொடர்புற்றவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

ஐரோப்பாவில் இயங்கி வரும் தீவிர பிரிவினைவாத அமைப்புகளும் வலதுசாரிக் குழுக்களுமே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதையும் இவ்வாய்வு உறுதிசெய்துள்ளது.
ஐரோப்பிய வன்முறைச் சம்பவங்களோடு முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தும் ஊடக அறிக்கைகளை ஈரோப்போலின் இவ்வாய்வு பொய்ப்பித்துள்ளது. ஐரோப் பாவில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பீதி(Islamophobia) அடிப்படையற் றது என்பதையும் இவ்வாய்வு உறுதிசெய்துள்ளது. பிரான்ஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலேயே அதிகளவிலான பயங்கரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன

No comments:

Post a Comment