Monday, May 30, 2011

ரேட்கோ மியாடிக் செர்பியாவின் நரேந்திர மோடி!


ரேட்கோ மியாடிக் செர்பியாவின் நரேந்திர மோடி!

பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ரேட்கோ மியாடிக் தற்போது பிடிபட்டுள்ளான். 1995 ஆம் வாக்கில் நடந்த போஸ்னிய செர்பிய போரில் 7500க்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று அவர்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்தவன்தான் ரேட்கோ மியாடிக்.
போரில் முஸ்லிம்களின் நிலங்களை எரித்தும் முஸ்லிம்களை கூட்டமாக கொலை செய்வதிலும் செர்பிய ராணுவத்தினர் ஈடுபட்டனர்.நிராயுதபாணியாக இருந்த மக்கள் மீது அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தினர். இதற்க்கெல்லாம் தலைமை தாங்கினவன்தான் இந்த ரேட்கோ மியாடிக்.

அங்கு நடைபெற்ற கொடூரங்களை ஜெர்மனியின் கிறித்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷஃபீர்கஸ் பின் வருமாறு கூறுகிறார்:
'மூன்று மாதங்கள் ஆன ஒரு குழந்தையின் மூக்கு மற்றும் காதுகள் வெட்டப்பட்டு இருப்பதை நான் கண்டேன்.
வயிறுகள் கிழிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களை நான் கண்டேன். அந்த சிசுக்கள் அனைத்தும் சின்னாபின்னப் படுத்தப்பட்டன. தொண்டைகள் கிழித்துக் கொல்லப்பட்ட இளவயது மற்றும் வயதான ஆண்களையும் கண்டேன். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். உலகின் எப்பகுதியிலும் திரைப்படங்களில் கூட இத்தகைய காட்சிகளை நான் கண்டது கிடையாது. நான் கண்ட காட்சிகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது

பாவம்... இந்த பத்திரிக்கையாளர் சில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் காவிப் போர்வையில் காலிகள் நடத்திய நர வேட்டையை பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார்.
இந்த கொடியவனின மகன் டார்கோ 'என் தந்தை பாரிச வாயு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்கம் கை கால்களை இயக்க முடியாத நிலையில் இருக்கிறார். எனவே அவரை சிறையில் அடைப்பதை தவிர்க்க வேண்டும்' என்ற கொரிக்கையை வைத்துள்ளார். இந்த கொடியவனின் மற்றொரு மகளான அனாவும் தற்கொலை செய்து கொண்டு 1994 ஆம் ஆண்டு இறந்து விட்டார். புதையுண்ட 7000 முஸ்லிம்களின் குடும்பத்தவரின் பிரார்த்தனை வீண் போகாதல்லவா!

இவனை பிடித்துக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு பணமாக முன்பு அறிவித்திருந்தனர். தற்போது இவன் பிடிபட்டு விட்டதால் அந்த பரிசு பணம் யாருக்க சேரும் என்றும் தெரியவில்லை.

இதே போன்ற குற்றங்களை செய்த நரேந்திர மோடியும் நம்முன் நல்லவராக உலா வந்து கொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் பிரார்த்தனை நரேந்திர மோடியை நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தும். ரேட்கோ மியாடிக் சட்டத்தின் பிடியில் சிக்க 15 வருடமானது. நரேந்திர மோடிக்கு இதை விட அதிக நாள் ஆனாலும் ஒரு நாள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்.

"அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்."

'முஸ்லிம்களான உங்களுக்கு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு இறைவனை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை இறைவன் முழுமையாக அறிபவன்.'
-குர்ஆன் 3:120

ARTICLE FROM SUVANAPPRIYAN.BLOGSPOT.COM

Saturday, May 28, 2011

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.

மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்
.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.

பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.

மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது 
பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.

“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசி’ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.

இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.

திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.
ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.

துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, “குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.

பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், “பென்சன் ராஜாக்கள்” என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.

தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.

காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.

“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. 

விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்” என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.
திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.

இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.

அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.
அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும்,விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

“ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: “சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.” இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.

மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

ARTICLE FROM PFIKARAIKKAL.WORDPRESS.COM

Friday, May 27, 2011

சிந்திக்க சில நபிமொழிகள்

1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121).

3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481).

4) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).

5) உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).

6) ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).

8) மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.

9) இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.

13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.

14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி

16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.

17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
20) செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.

22) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.

23) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.

24) தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

தஜ்ஜாலிஸத்தை வெற்றி கொள்வோம். [ விடியோ தொகுப்பு -பாகம் 01 ]

இந்த விடியோக்களை பார்க்க முன்
  1. இந்த விடியோக்களில் நாம் நினைத்தும் பார்த்திராத பல தகவல்கள் அடங்கியுள்ளன.மேலும் சாத்தானிய லுசிபரை வணங்கும் இலுமினாட்டிகளின் அட்டூழியங்களும் அவர்கள் புதிய உலகுக்கான பிரகடனத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பதும் காட்டப்படுகிறது.
  2. தற்போது முஸ்லிம் உம்மத் இரு பிரிவாக[சுன்னி,சியா] பிரிந்துள்ளது.இப்பிரிவை ஏற்படுத்தியதே நயவஞ்சக யூதர்களே என்பது யாரும் அறிந்த விடயம்.மேலும் நாம் சியாப் பிரிவினரின் கொள்கைக்கு முற்று முழுதாக எதிரானவர்கள் என்பதையும் எம் வாழ்வு நெறியாக அல்லாவின் கட்டளையையும் நபி[ஸல்] வாழ்கை முறையயுமே பின்பற்றுபாவர்கள் என்பதையும் உறுதியாக சொல்லிக் கொள்கிறோம்.
  3. கவனிக்கவும் இந்த விடியோக்களின் பின்னணியில் இசை ஒலிக்கப்படுகிறது..
  4. இந்த விடியோக்களின் தொடரில் வந்த பாகம் 39,48,49 ஆகியன ஷியாக் கொள்கையை பிரதிபலிப்பான ஆகையால் அவற்றை இங்கு பதிவிடவில்லை.
  5. இந்த விடியோக்களில் சிலவற்றில் சில நடிகையினரின் கவர்ச்சியான படங்கள் காட்டப்படுகின்றன அவை R RATED CLIPS என குறித்துள்ளேன்.அதை தவிர்ந்து கொள்பவர்கள் தவிர்ந்து கொள்ளவும்.இந்த விடியோவை செய்தவர்கள் காரணமாகவே அவற்றை இணைந்துள்ளனர்,நம்மை அறியாமல் நாம் இலுமினடிகளை ஆதரிப்பது இவ்விடியோக்களிளிருந்து தெரியவரும்.
  6. கடைசியாக, இவ்விடியோக்கள் அனைத்தும் பல தகவல்களை தாங்கி வருகின்றன.அவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை ஒதிக்கி விடவும்
  7.  இந்த விடியோக்களில் உள்ள குறைகளை விட்டு விட்டு நிறைகளை மட்டும் உள்வாங்கிக்கொள்ளவும்.
  8. இந்த பதிவை போட்ட நோக்கம் எல்லோரும் தெளிவோ பெறவேயாகும்.இந்த விடியோக்களில் வரும் இஸ்லாத்திற்கு முரணான அனைத்து விடயங்களையும் நாம் எதிர்க்கிறோம்.அல்லாஹ் என்னுடைய உங்களுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பானாக.ஆமீன்


1.அறிமுகம்                                                      

                                                               

















2.திருக்குர்ஆனின் அத்தாட்சிகள  
       
                                                                                      
3.அதிர்ச்சியூட்டும் ஃபிர்அவ்னிய சாட்சிகள்

                                                                                        
4.கட்டிடக் கலையும் சக்தியும்              
        
                                                                                         
5.மனித சக்தியின் போராட்டம் 

                                                                                         
6.இன்றைய நவீன ஃபிர்அவ்ன்கள் 

                                                                                        
 7.தஜ்ஜாலுக்காக அர்பணிக்கப்பட்டவைகள் 
 
                                                                                           


 8.அறிவை கட்டுப்படுத்துதல் [ SORRY FOR INCONVENIENCE WORDS AND PICTURES,THIS IS 'R' CLIP.]

                                                                                         
 9.குழந்தைகளின் அறிவை கட்டுப்படுத்தல்[ SORRY FOR INCONVENIENCE WORDS AND PICTURES,THIS IS 'R' CLIP.

                                                                                                                    
                                                                                        
 10.புதிய உலகிற்கான பிரகடனம்

                                                                                       
 11.மதிமயக்கும் மந்திர இசைகள்    [ MUTE THE AUDIO AND GET THE MESSAGE ONLY. SORRY FOR INCONVENIENCE WORDS AND PICTURES,THIS IS 'R' CLIP]  

                                                            
                                                          

 12. இருளுக்கு ஒளியூட்டல் [ SORRY FOR INCONVENIENCE WORDS AND PICTURES,THIS IS 'R' CLIP]  

                                                                                              

 13.சிவப்பு மங்கை [ THIS VIDEO CONTAIN A GOOD SYMBOL IN THE LAST MINUTES.SORRY FOR INCONVENIENCE WORDS AND PICTURES,THIS IS 'R' CLIP]  


                                                                                        
 14.ஹாலிவுட்   [SORRY FOR INCONVENIENCE WORDS AND PICTURES,THIS IS 'R' CLIP]
                                                                                          
                                                                                          


 15.ஹாலிவுட்டும் வாக்களிக்கப்பட்ட பூமியும்

                                                                                           


 16.ஊடகமும் முஸ்லிம்களும்

                                                                                          

 17.தீவிரவாதத்திற்கெதிரான போர் 

                                                                                           

 18.நயவஞ்சகத்தனமும் ஜனநாயகமும்

                                                                                         

19.யுஏப்ஓ தோற்றப்பாடு[ பறக்கும் தட்டு ]

                                                                 

 20.யுஏப்ஓ தோற்றப்பாடு (தொடர்ச்சி)[ பறக்கும் தட்டு ]

                                                               

 21.இனி வெளிவர இருப்பவைகள் என்ன? [ JUST A REVIEW ONLY ]

                                                                                         

 22.சாத்தானிய பாப்இசை கலாச்சாரம் [SORRY FOR INCONVENIENCE WORDS AND PICTURES,THIS IS 'R' CLIP]

                                                                                        
                                                                                           


 23.பொருள்முதல்வாதமும் அத்தோடு நம்   போராட்டமும்

                                                                                           

 24.பறிக்கப்பட்ட சுதந்திரம்

                                                               http://www.youtube.com/watch?v=2kZLf70FZPU&NR=1


25.தஜ்ஜால் இங்கே இருக்கிறான்

                                                                                     

 26.தஜ்ஜால் இங்கே இருக்கிறான் (தொடர்ச்சி)

                                                                                           

 27.தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்?

                                                                


 28.தலைவர்கள் ஷைத்தானிய கோட்பாட்டை  பின்பற்றுவதேன்? (தொடர்ச்சி)

                                                                                            
                                                                      
 29.கடவுள்கள் பற்றிய உண்மைகள்

                                                                                           

 30.சதுரங்க தளமும் கடவுள்களும்

                                                                                                                                                          


 


தொடரும்TO BE CONTINUE
INSHA ALLAAH










                                                                                           



                                                                                                                                                                                   
                                                                                                                                            

Tuesday, May 24, 2011

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்!.


நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!  

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 
 
என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 

என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்! 


உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!


பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!


கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!


ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

 

நன்றி: அல் ஜன்னத் (செப்டம்பர் 2007).

பயனுள்ள கல்வி

                                            பயனுள்ள கல்வி


1) சொத்துக்களை விற்று கல்வியை பெற்ற காலம் மலையேறி விட்டது.இன்று கல்வியை விற்று சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

2) இளைஞர்கள் அரபு நாட்டிற்கு செல்வதுதான் தங்கள் வாழ்வின் இலட்சியம் என்ற நிலையை விட்டு மாறவேண்டும். அரசு வேலைகளை முஸ்லிம் இளைஞர்கள் பெறுவதற்கு நம் சமுதாயத்தின் பங்கு என்ன? என்பதை சமூக ஆர்வலர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

3) நம் மூளையை செழிப்புள்ளதாக மாற்ற வேண்டியதில்லை, மாறாக நம் மூளையை தெளிவுள்ள மூளையாக மாற்றவேண்டும். ஒரு சமுதாயத்தை அழிக்கவேண்டு மென்றால் கல்வியில் மாற்றம் கொண்டுவந்தால் போதும். மேலை நாட்டின் காலச்சார சீரழிவின் பின்னனி என்ன? என்பதை ஆராய்ந்தால் இவ்விஷயம் தெளிவாக விளங்கும்.

4) மார்க்கக் கல்வியோடு கூடிய உலக்கல்வியே நமக்கு பயனளிக்கும். பயனுள்ள கல்வி என்பது ஒரு செழிப்பான நிலத்தில் பெய்யும் மழைபோன்றது. இறைவனை அஞ்சுபவனே உண்மையான அறிஞன், இறையச்சம் இல்லாதோர் வேதம் சுமக்கும் கழுதைகள்.

5) தீய அறிஞர்களிடமிருந்துதான் ஒரு சமுதாயத்திற்கு சாபக்கேடு உருவாகிறது. நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை, சிறந்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அமானிதம் பற்றி மறுமையில் விசாரணை உண்டு.

 

Dr.KVS ஹபீப் முஹம்மது

பதினோரு வீதமான பாகிஸ்தான் மக்களே அமெரிக்காவை ஆதரிக்கின்றனர்.

ஒசாமா பின் லாதின் கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு பாகிஸ்தானில் வெறும் பதினோரு வீதமான மக்களே ஒபாமாவையும் அமெரிக்காவையும் ஆதரிப்பதாக கூறுகிறது.கடந்த வருடம் இது பதினேழு வீதமாகவும் 2009 இல் பதினாறு வீதமாகவும் இருந்தது.மேலும் 78 வீதமான மக்கள் நாட்டின் சட்டம் குரானின் அடிப்படையில் நிறுவப்பட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.

As President Barack Obama prepares to make a major address on the tumultuous changes spreading throughout the Middle East, a new survey finds that America’s image in Arab and Muslim nations has further eroded. 
 
The survey, conducted before Osama bin Laden’s killing, shows that only 11 per cent people in Pakistan view the United States and President Barack Obama favourably, compared to 17 per cent last year and 16 per cent in 2009.

Views of the US remain negative in other Muslim and Arab nations as well, as they have been for nearly a decade. In Jordan and Turkey also views are more negative than they were one year ago.
With the exception of Indonesia, President Obama remains unpopular in the Muslim nations polled, and most disapprove of the way he has handled calls for political change roiling the Middle East.

The survey – conducted between March 21 and April 26 – notes that many of the concerns that have driven animosity towards the US in recent years are still present – a perception that the US acts unilaterally, opposition to the war on terror and fears of America as a military threat.

Washington’s Pew Research Centre, which conducted the survey, reports
that as many as 78 per cent people in Pakistan say laws should be based strictly on religion.

Source: Dawn